அவசரப்பட்ட வடிவேலு.. லெஃப்ட் ஹேண்டிலேயே வெளியே போக சொன்னாரா பி. வாசு? ரொம்ப அசிங்கம்!
சென்னை: வைகைப்புயல் வடிவேலு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்தாலும், பழையபடி அவருக்கான மதிப்பும் மரியாதையும் இண்டஸ்ட்ரியில் இல்லை என்றே பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
போண்டா மணிக்கு நிதியுதவி அளிக்காதது, மயில்சாமியின் மரணத்திற்கு செல்லாதது என தொடர்ந்து வடிவேலு மீது ஏகப்பட்ட புகார்கள் குவிந்து வரும் நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டிலும் அட்ராசிட்டி செய்து வருகிறாராம் வடிவேலு.
இந்நிலையில், சமீபத்தில் சந்திரமுகி 2 செட்டில் இருந்து அவசரமாக கிளம்ப நினைத்த வடிவேலுவை லெஃப்ட் ஹேண்டிலேயே இயக்குநர் பி. வாசு போக சொன்னதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிக்கவே தடை
இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் 23ம் புலிகேசி படத்தில் நடித்த வடிவேலு மீண்டும் அவர் தயாரிப்பில் 24ம் புலிகேசி படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், மேக்கப் மேனை மாற்றுவது, ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு தாமதமாக வருவது, நடிகர்களை மாற்றுவது என அராஜகம் செய்து வந்த நிலையில், அந்த படம் டிராப் செய்யப்பட்டு வடிவேலு நடிக்கவே தடை விதிக்கப்பட்டது.

வடிவேலு ரிட்டர்ன் ஆகியும்
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் வடிவேலு மீண்டும் சினிமாவுக்கு ரிட்டர்ன் ஆக ஷங்கர் பஞ்சாயத்தை லைகா நிறுவனம் நிறைவுக்கு கொண்டு வந்தது. ஆனால், நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் படு தோல்வியை சந்தித்த நிலையில், லைகா நிறுவனமே வடிவேலு மீது பயங்கர கடுப்பில் இருப்பதாக கூறுகின்றனர்.

சந்திரமுகி 2
மேலும், இயக்குநர் பி. வாசு தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் சந்திரமுகி 2 படத்தில் நகைச்சுவை நடிகராக இணைந்துள்ள வடிவேலு தொடர்ந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் தேவையில்லாத சர்ச்சைகளை கிளப்பி வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

அவசரப்பட்ட வடிவேலு
ஏற்கனவே நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தை முடிப்பதற்காக சந்திரமுகி 2 ஷூட்டிங்கை தாமதப்படுத்தினார் வடிவேலு என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சமீபத்தில் மீண்டும் ஒரு முறை அப்படி சந்திரமுகி 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து உடனடியாக வேறு ஒரு இடத்துக்கு கிளம்பிப் போகப் போறேன் என அடம்பிடித்து இருக்கிறாராம் வடிவேலு.

டென்ஷனான இயக்குநர்
இந்த சீனை முடித்து விட்டு வேறு எங்காவது போங்க என இயக்குநர் பி. வாசு கேட்டுக் கொண்ட நிலையிலும், வடிவேலு கேட்காமல் அடம்பிடித்த நிலையில், இயக்குநர் பி. வாசு ரொம்பவே டென்ஷனாகி விட்டதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. மேலும், அப்போது வடிவேலுவை வெளியே அனுப்ப பி. வாசு செய்த விஷயம் தான் கோடம்பாக்கத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருப்பதாக கூறுகின்றனர்.

லெஃப்ட் ஹேண்டிலேயே
இயக்குநர் பி. வாசுவின் பேச்சையும் கேட்காமல் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியே போக அடம்பிடித்த வடிவேலுவை பார்த்து லெஃப்ட் ஹேண்டிலையே போங்க என பி. வாசு அனுப்பியது வடிவேலுவையே மனதளவில் பாதித்ததாகவும் பல இடங்களில் இதனை அவர் சொல்லி வருத்தப்பட்டதாகவும் சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் தீயாய் பரவி வருகின்றன. அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என்றும் வடிவேலுவுக்கு வேண்டாதவர்கள் இப்படி கிளப்பி விடுவதாகவும் சில பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











