Vijay On Rajini - என்ன நம்பிக்கை சார்.. ரஜினிக்கு தில்லு அதிகம்.. மிரண்டு போன விஜய்.. சீக்ரெட் சொன்ன இயக்குநர்
சென்னை: Vijay On Rajini (ரஜினி குறித்து விஜய்) ரஜினிக்கு உண்மையில் தில் ரொம்பவே அதிகம் என விஜய் சொன்னதாக இயக்குநர் பி.வாசு தெரிவித்திருக்கிறார்.
ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படம் கடந்த மாதம் வெளியானது. நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். பான் இந்தியா படமாக வெளியான ஜெயிலர் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டிருக்கிறது. இதுவரை உலகம் முழுவதும் 600 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறது. இதன் காரணமாக ரஜினிக்கும், நெல்சன் திலீப்குமாருக்கும் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் காரை பரிசாக கொடுத்திருக்கிறார்.

முக்கியமான படம்: ஜெயிலர் படத்துக்கு முன்பு வெளியான சில படங்கள் ரஜினிக்கு சரியாக போகவில்லை. எனவே இந்தப் படம் அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எப்போதும் தோல்வியை கொடுத்துவிட்டால் அடுத்த படத்தை பிரமாண்ட வெற்றியாகத்தான் கொடுப்பார் ரஜினிகாந்த். அப்படித்தான் ஜெயிலரும் இருக்கிறது. இதற்கு முன்னதாகவே இதே இக்கட்டான சூழலை சந்தித்திருக்கிறார்.
பாபா: ரஜியின் கரியரிலேயே மோசமான தோல்வி படமாக அமைந்தது பாபா. அவரே கதை எழுதி சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். அந்தப் படத்தின் தோல்வியால் விநியோகஸ்தர்களுக்கு பணத்தை மீண்டும் கொடுக்கும் அளவு நிலைமை சென்றது. எனவே ரஜினியின் கரியர் பாபா படத்தோடு முடிந்துவிட்டது. இனி அவரால் எழுந்திருக்கவே முடியாது என திரைத்துறையில் இருப்பவர்கள் ஓபனாகவே சொன்னார்கள்.
யானை இல்லை குதிரை: ஆனால் அடுத்த படம் சந்திரமுகி என்று பிரமாண்ட வெற்றி படத்தில் நடித்தார். அந்தப் படத்தின் ரிலீஸுக்கு முன்னதாக நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், "நான் யானை இல்லை குதிரை. கீழே விழுந்தா பட்டுனு எழுந்துடுவேன்" என கூறியிருந்தார். அவரது இந்த வசனம் இன்றுவரை பலரது ஃபேவரைட். முக்கியமாக சினிமாவில்கூட அதுமாதிரி பஞ்ச் டயலாக்கை கேட்க முடியாது என்று ரசிகர்கள் சொல்வதுண்டு.

விஜய் பிரமிப்பு: இந்நிலையில் சந்திரமுகி படத்தின் இயக்குநர் பி.வாசு சமீபத்தில் அளித்த பேட்டியில், "சந்திரமுகி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நான் யானை இல்லை குதிரை. கீழே விழுந்தா பட்டுனு எழுந்துடுவேன் என்று சொன்னார். அதை பார்த்த விஜய் அடிக்கடி என்னிடம் ரஜினி சாருக்கு என்ன நம்பிக்கை சார். எவ்வளவு கான்ஃபிடன்ஸ். படமே ரிலீஸ் ஆகல. ஆடியோ வெளியீட்டு விழாவுல் அப்படி பேசினார். அவருக்கு தில்லு அதிகம் சார் என்று சொன்னார்" என பி.வாசு கூறினார்.
சந்திரமுகி 2: பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 படம் உருவாகியிருக்கிறது. அதில் லாரன்ஸ், வடிவேலு, கங்கனா ரணாவத், ராதிகா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படமானது செப்டம்பர் 19ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











