தமிழ் சினிமாவின் அமிதாபச்சன்.. சத்யராஜை புகழ்ந்து தள்ளிய இயக்குனர் !

சென்னை : தமிழ் சினிமாவின் அமிதாபச்சன் சத்யராஜ் என்று பி.வாசு புகழாரம் சூட்டினார்.

இயக்குனர் பி.வாசு தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். இவர் நேற்று நடந்த சிபிராஜின் வால்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து படத்தை பற்றிய தன் கருத்தையும் மற்றும் பல சுவாரஸ்யமான விசயங்களையும் பகிர்ந்து கொண்டார். வால்டர் படத்திற்கும் பி.வாசுவுக்கும் ஒரு சுவாரஸ்யமான தொடர்பு இருக்கிறது .

Director P. Vasu Speech Walter Movie Audio launch

அது பி.வாசு அவர்கள் இயக்கத்தில் உருவாகிய சத்யராஜ் கதாநாயகனாக நடித்து மாபெரும் வெற்றி அடைந்த படம் தான் வால்டர் வெற்றிவேல். இந்த படம் 1993ல் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்தது. இந்த படத்தின் பாதி தலைப்பையே தற்போது சிபிராஜ் நடித்திருக்கும் படத்திற்கு வைத்திருக்கிறார்கள் .

Director P. Vasu Speech Walter Movie Audio launch

இசை வெளியீட்டு விழாவில் இதை பற்றி பேசிய பி.வாசு, நேற்றுத்தான் வால்டர் வெற்றிவேல் படம் இயக்கியது போல இருக்கிறது. தற்போது வால்டர் படம் வெளியாக இருக்கிறது. வால்டர் வெற்றிவேல் படத்தின் முதல் காட்சியை ரஜினிகாந்த் கிளாப் தட்டி ஆரம்பித்தாகவும் பிரபு அவர்கள் கேமரா ஸ்விட்ச் ஆன் செய்ததாகவும் விஜயகாந்த் இயக்கியதாகவும் படத்தின் முதல் வசனமே வால்டர் வெற்றிவேல் எனும் சிங்ககுரலில் சத்யராஜ் பேசியதை இன்றும் மறக்கவில்லை என பி.வாசு அவர்கள் நினைவுகூறினார்.

Director P. Vasu Speech Walter Movie Audio launch

நடிகர் சத்யராஜின் வெற்றிபடங்களில் வால்டர் வெற்றிவேலும் ஒன்று. நடிகர் சத்யராஜ் ஒரு சிறந்த நடிகர் அது நமக்கு தெரியும் அவரின் ஆரம்ப காலத்தில் சத்யராஜின் முகம் ஒரு மாதிரியாக இருக்கிறது என்று அனைவரும் கூறிய போது தானே துணிச்சலுடன் அதை சரிசெய்தார் என்று பி.வாசு விழாவில் கூறினார். அந்த மாதிரி கலைதாகம் மிக்கவரின் மகன் சினிமாவில் நுழையும் போதே எனக்கு மிக சந்தோஷமாக இருந்தது என பி.வாசு புகழ்ந்தார்.

மேலும், பே‌சிய பி. வாசு, தமிழ்நாட்டின் அமிதாப்பச்சன் சத்யராஜ் என்று புகழ்ந்து பேசினார். ஏனெனில் நடிகர் சத்யராஜ் படப்பிடிப்பின் போது 4 பக்க வசனங்களையும் எளிதில் மனப்பாடம் செய்து விடுவார் நாம் என்னதான் வசனம் கொடுத்தாலும் அதை மெருக்கேற்றி சரியாக பேசுவார் என வாசு கூறினார்.

தற்போது நடிகர் சத்யராஜ் பல மொழிகளில் நடித்து வருகிறார். இதே போல சிபிராஜும் கூடிய சீக்கிரத்தில் பல படங்களில் பல மொழிகளில் நடிப்பார் என பி.வாசு நம்பிக்கை தெரிவித்தார். மேலும் தனது வால்டர் வெற்றிவேல் படம் ஒரு சரியான போலீஸ் படம் அந்த படம் சரியாக சொல்லபட்டது தான் படத்தின் வெற்றிக்கு காரணம். எந்த ஒரு போலீஸ் கதையும் சரியாக சொல்லப்பட்டால் கட்டாயம் வெற்றி பெறும் என அறிவுரை கூறினார் பி.வாசு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X