கடக்க முடியாத துயரம்.. முகத்தை கூட காட்டவில்லை என்று உன் மகள் அழுகிறாள்ணா.. பா ரஞ்சித் உருக்கம்!

சென்னை: நடிகர் மாறனின் மரணம் கடக்க முடியாத துயரம் என இயக்குநர் பா ரஞ்சித் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல துணை நடிகர்களில் ஒருவர் மாறன். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதியில் வசித்து வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மாறனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆதிவாசி கேரக்டர்

ஆதிவாசி கேரக்டர்

இந்நிலையில், நடிகர் மாறன் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 48 வயதே ஆன மாறன் 2004-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான கில்லி படத்தில் நடித்திருந்தார். இதில் ஆதிவாசி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

மேடை கச்சேரிகள்

மேடை கச்சேரிகள்


தொடர்ந்து டிஷ்யூம், பட்டாசு, தலைநகரம், வேட்டைக்காரன், கேஜிஎஃப் உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். மேலும் கானா பாடல்களையும், மேடை கச்சேரிகளிலும் பாடி வந்தார் நடிகர் மாறன்.

பிரபலங்கள் இரங்கல்

பிரபலங்கள் இரங்கல்

மாறன் மறைவு தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறை பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடக்க முடியாத துயரம்

கடக்க முடியாத துயரம்

அந்த வகையில் இயக்குநர் பா ரஞ்சித் உருக்கமாக டிவிட் ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, கடக்க முடியாத துயரம்.. எப்போதும் கட்டுகடங்காத அன்பை பொழியும் மாறன் அண்ணாவே, உன் முகத்தை கூட காட்டவில்லை என்று உன் மகள் அழுகிறாள் ணா!! என்னிடம் தேற்றுவதற்கு வார்த்தைகள் இல்லை!! நண்பர்களே பாதுகாப்பாக இருங்கள் !! என குறிப்பிட்டுள்ளார்.

நம்ப முடியவில்லை

நம்ப முடியவில்லை

இதேபோல் நடிகர் ஆர்யாவும் நடிகர் மாறனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், மாறன் அண்ணா குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இதை நம்ப முடியவில்லை. உங்களை மிஸ் பண்ணுவோம் அண்ணா என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X