Thangalaan movie: விரைவில் தங்கலான் சம்பவம்.. உறுதி செய்த பா ரஞ்சித், ஜிவி பிரகாஷ்!
சென்னை: பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம், மாளவிகா மோகனன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் தங்கலான்.
சுதந்திர போராட்ட காலத்தை முன்னிலைப்படுத்தி இந்தப் படத்தை பா ரஞ்சித் இயக்கியுள்ளார். படத்தில் கேஜிஎப் மக்களின் வாழ்க்கையை அவர் மையப்படுத்தியுள்ளார்.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த வாரத்தில் தங்கலான் பட டீசர் வெளியாகவுள்ளதாக பா ரஞ்சித், ஜிவி பிரகாஷ் உறுதி: நடிகர் விக்ரம் அடுத்தடுத்த சிறப்பான கதைக்களங்களில் நடித்து வருபவர். தன்னுடைய கேரக்டருக்காக மிகப்பெரிய மெனக்கெடல்களை செய்துவரும் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் பொனினியின் செல்வன் 2 படம் வெளியாகி அவருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுத் தந்தது. ஆதித்ய கரிகாலனாக இந்தப் படத்தில் விக்ரமின் கேரக்டர் மிகப்பெரிய தாக்கத்தை ரசிகர்களிடையே பெற்றுத் தந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது விக்ரம் நடிப்பில் தங்கலான் படம் உருவாகியுள்ளது. பா ரஞ்சித் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
முன்னதாக கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படமும் வெளியாகவுள்ளது. விக்ரம் ஸ்டைலிஷ்ஷாக ஜான் என்ற கேரக்டரில் இந்தப் படத்தில் நடித்துள்ளார். ரிது வர்மா, சிம்ரன், ராதிகா உள்ளிட்டவர்கள் இணைந்துள்ள இந்தப் படத்தின் அடுத்தடுத்த ட்ரெயிலர்கள், பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இந்தப் படத்தின் ரிலீசையொட்டி படக்குழுவினர் அடுத்தடுத்த ப்ரமோஷன்களில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதனிடையே தங்கலான் படம் ஜனவரியையொட்டி வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விக்ரமுடன் இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். விக்ரம் படத்தில் இருவேறு கெட்டப்புகளில் நடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய படத்தின் இயக்குநர் பா ரஞ்சித், படம் குறித்த முக்கியமான அறிவிப்பை வரும் வாரத்தில் வெளியிடவுள்ளதாகவும் அதே நேரத்தில் படத்தின் டீசரும் வெளியாகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். டீசருடன் முக்கியமான அறிவிப்பு வெளியாகவுள்ளதாக அவர் கூறியுள்ளதால், அது படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இதுகுறித்து படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
படத்தின் சம்பவம் விரைவில் வெளியாகவுள்ளதாகவும் படத்தின் பிரம்மாண்டமான டீசர் விரைவில் வெளியாகவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் நெருப்பு எமோஜிகளையும் அவர் தன்னுடைய பதிவில் இணைத்துள்ளார். இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு உரிய படமாக தங்கலான் உள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் மீதமுள்ளதால் படம் அடுத்த ஆண்டு பொங்கல் வெளியீடாக வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











