twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆடி போனா ஆவணி… அட்டக்கத்தி படம் வெளியாகி 9 ஆண்டுகள் நிறைவு !

    |

    சென்னை : அட்டக்கத்தி திரைப்படம் வெளியாகி 9 ஆண்டுகளை நிறைவு செய்வதை, பா ரஞ்சித்தின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    2012ம் ஆண்டு தினேஷ் நடித்த 'அட்டக்கத்தி ' படத்தின் மூலம் பா.ரஞ்சித் இயக்குநராக அறிமுகமானார். இது ஹீரோவான தினேஷுக்கும், இயக்குநரான ரஞ்சித்திற்கும் முதல் படமாக அமைந்தது.

    ரொம்ப நாளைக்கு அப்புறம் புடவை போல.. நல்லா இருக்கு.. பிரபல நடிகையை பார்த்து ஜொள்ளும் ஃபேன்ஸ்! ரொம்ப நாளைக்கு அப்புறம் புடவை போல.. நல்லா இருக்கு.. பிரபல நடிகையை பார்த்து ஜொள்ளும் ஃபேன்ஸ்!

    ரோம்-காம் படமான இது பாக்ஸ் ஆபிஸில் அற்புதங்களை செய்ததோடு, விமர்சகர்களிடமிருந்து பரவலான பாராட்டை பெற்றது. அதன்பிறகு ரஞ்சித்தும், தினேஷும் தனித்தனியாக பல வெற்றிப் படங்களில் பணிபுரிந்துள்ளனர்.

    அட்டக்கத்தி

    அட்டக்கத்தி

    சரியாக வெட்டாத கத்தியை வெண்ணெய் வெட்டி என்பார்கள். அதற்கும் லாயக்கில்லாததுதான் அட்டக்கத்தி. அப்படி எதற்கும் ஆகாத இளைஞனைப் பற்றிய கதை தான் அட்டக்கத்தி. தமிழ் சினிமாவில் மாற்று சினிமாக்கதை சொல்லும் உத்தியில், சம்பவங்களின் கோர்வையாகக் கதையை கொடுத்தார் இயக்குநர் பா.இரஞ்சித்.

    தினேஷ்

    தினேஷ்

    பள்ளி இறுதியில் தேறாத நிலையிலும் பேருந்து பிடித்து டுடோரியல் காலேஜ் போகும் சாக்கில் கல்லூரிக்குப் போவதாகக் கதை பண்ணிக் கொண்டிருக்கும் இளைஞன் தினேஷ்தான் கதையின் நாயகன். அட்டக்கத்தி கேரக்டருக்கு அப்படியே பொருத்தமாக இருக்கிறார் தினேஷ். மதுரை இளைஞர்களே உரத்துக் குரல் கொடுக்கும் தமிழ் சினிமாவில் ஓடும் பஸ்ஸில் லாவகமாக ஏறும் புட்போர்டு தாவல் என அழகாக நடித்திருப்பார் தினேஷ்.

    நந்திதா ஸ்வேதா சிறப்பாக

    நந்திதா ஸ்வேதா சிறப்பாக

    நந்திதா ஸ்வேதா இப்படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் முதன்முறையாக ஹீரோயினாக அறிமுகமானார். ஸ்கூல் கேர்ள், காலேஜ் கேர்ள் என அவர் காட்டும் மாறுதலான முகத்தோற்றங்கள் படத்தை மேலும் சிறப்பாக்கியது.

    ஆடி போனா ஆவணி

    ஆடி போனா ஆவணி

    அட்டக்கத்தி படத்தில் மிகவும் முக்கியமானது இசை. இந்த படம் ரிலீஸ் ஆகும் முன்னே பாடல்கள் ஹிட்டாகின. அதுவும் ஆடி போனா ஆவணி, அவ ஆளை மயக்கும் தாவணி பாட்டு வேறலெவல் ஹிட். அலட்டிக்காத இசை, மனதைக் கொள்ளை கொள்ளும் பின்னணி இசையாக அமைந்து இருந்தது. விளையாட்டாகப் போகும் முன்பாதிக் காதல் கதை பின்பாதியில் சீரியசாகுமே என்று யோசித்த போது, க்ளைமாக்சும் விளையாட்டாகவே முடிந்துவிடுகிறது.

    பா.ரஞ்சித் உலகளவில் கவனம்

    பா.ரஞ்சித் உலகளவில் கவனம்

    இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய, பா ரஞ்சித் இயக்கிய முதல் திரைப்படம் இதுவாகும். இந்த திரைப்படத்தை அடுத்து, மெட்ராஸ் படத்தை இயக்கினார். இந்த திரைப்படத்தின் வெற்றியை அடுத்து, வெற்றி இயக்குனராக அடையாளம் கண்டவர் பின்னர் ரஜினிகாந்த்தை வைத்து கபாலி எனும் பிரம்மாண்டமான திரைப்படத்தை இயக்கியதன் மூலம் உலகளவில் கவனம் பெற்றார். தற்போது சார்ப்பட்டா பரம்பரை திரைப்படத்தை கொடுத்து அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறார்.

    9 ஆண்டுகள் நிறைவு

    9 ஆண்டுகள் நிறைவு

    இந்நிலையல் அட்டக்கத்தி திரைப்படம் வெளியாகி 9 ஆண்டுகள் நிறைவு செய்வதை பா. ரஞ்சித்தின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் #9yearsofattakathi என்ற ஹேஸ்டேக்கையும் வைரலாக்கி வருகின்றனர்.

    English summary
    One of the most celebrated contemporary directors in Tamil cinema with films such as Madras, Kabali and Kaala to his credit Ranjith.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X