எனக்கும் பெண் குழந்தை இருக்கு..ரொம்ப பயமா இருக்கு.. பா ரஞ்சித் வேதனை!
சென்னை: பாண்டிசேரியில் சிறுமியை வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, இயக்குநர் பா ரஞ்சித், இந்த சம்பவத்தை பார்க்கும் போது ரொம்ப எமோஷ்னலாகவும், பதற்றமாகவும் பயமாகவும் இருக்கிறது. அந்த செய்தியை பார்த்துவிட்டு நான் மிகவும் டிஸ்டர்பாகி விட்டேன். ஏன் என்றால் எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கு என்றார்.
பாண்டிச்சேரியைச் சேர்ந்த 9 வயது சிறுமி, கடந்த வாரம் திடீரென காணாமல்போனார். இதையடுத்து மார்ச் 5ந் தேதி அவரது வீட்டின் அருகில் உள்ள வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்டார். போலீசார் சிறுமியின் உடலைக் கைப்பற்றி, அரசு பொது மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, 59 வயது மதிக்கத்தாக்க விவேகானந்தன், 19 வயதுடைய கருணாஸ் என்ற இரண்டு நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அந்த சிறுமியை ஒரு வீட்டில் அடைத்து சித்ரவதை செய்து கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் புதுச்சேரியில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பயமாக இருக்கு: இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பா ரஞ்சித், பாண்டிசேரி சம்பவத்தை பார்க்கும் போது ரொம்ப எமோஷ்னலாகவும், பதற்றமாகவும் பயமாகவும் இருக்கிறது. அந்த செய்தியை பார்த்துவிட்டு நான் மிகவும் டிஸ்டப்பாகி விட்டேன். ஏன் என்றால் எனக்கும் வீட்டில் ஒரு பெண் குழந்தை இருக்கு. ஆனால், இதுபற்றி நான் வீட்டில் பேசவில்லை. இது எனக்கு பெரிய பயத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த பயம் வந்து குற்றத்தை செய்தவர்களை மட்டுமே மையப்படுத்தி இல்லை. இந்த சமுதாயத்தில் நிறைய பிரச்சனைகள் இருக்கு,பல பிரச்சனைகளை நாம் சரியாக கையாள வில்லை.
தனி மனிதரோட பிரச்சனை இல்லை: இப்போது இருக்கும் கல்வி முறை சரியாக இருக்கிறதா, அனைத்தையும் சரியாக சொல்லித்தரவில்லை. அது மட்டுமில்லாமல் இப்போது இருக்கும் இந்த போதை பழக்கம் பலரை ஈசியாக மாற்றி இருக்கிறது. இதை தனி மனிதனோட பிரச்சனை என்று பார்த்தால் இது சமுதாயத்தின் பிரச்சனையாக மாறி உள்ளது. தற்போது தவறு செய்த குற்றவாளிகள் மாட்டிக்கொண்டார்கள். ஆனால், தவறு செய்து கொண்டு இருக்கும் பல குற்றவாளிகள் இருந்து கொண்டுத்தான் இருக்கிறார்கள்.
சமுதாயம் தான் காரணம்: இந்த குற்றத்திற்கு ஒட்டுமொத்த சமுதாயம் தான் காரணம் என்று நான் கருதுகிறேன். இதற்கு சமுதாயம், அரசியல் கட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் போன்றவை பொருப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த எண்ணம் ஏன் தோன்றுகிறது. இந்த எண்ணம் ஏற்பட என்ன காரணம், இந்த எண்ணத்தை எப்படி அழிக்க வேண்டும் என்கிற முறையான பயிற்சி நமக்கு தேவை. இதற்கு காரணம் கல்வியும்,பகுத்தறிவு இன்மையும் தான் என்று நான் நினைக்கிறேன். இதற்கு முறையான பயிற்சி எடுக்கும் போது இந்த பிரச்சனையை களைய முடியும் என்று பாரஞ்சித் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











