தனித்தொகுதி மட்டுமில்லாமல் பொதுத்தொகுதியிலும் வெற்றி.. திருமாவை வாழ்த்திய பிரபல இயக்குநர்!

சென்னை: சட்டசபை தேர்தலில் நான்கு இடங்களில் முன்னிலை வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இயக்குநர் பா. ரஞ்சித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றது. இதில் தி.மு.க கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

இதில் தனிச் சின்னத்தில் போட்டியிட்டது விடுதலை சிறுத்தைகள் கட்சி. அதிலும் தனித்தொகுதி மட்டுமின்றி பொதுத்தொகுதியிலும் விசிக போட்டியிட்டது.

6 தொகுதிகளில் போட்டி

6 தொகுதிகளில் போட்டி

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நாகையில் ஆளூர் ஷா நவாஸ், காட்டுமன்னார் கோயில் தொகுதியில் சிந்தனை செல்வன், செய்யூர் தொகுதியில் பனையூர் பாபு ஆகியோர் போட்டியிட்டனர். இதேபோல், வானூர் தொகுதியில் வன்னி அரசும், திருப்போரூர் தொகுதியில் எஸ்.எஸ் பாலாஜியும், அரக்கோணம் தொகுதியில் கவுதம் சன்னாவும் போட்டியிட்டனர்.

திருப்போரூரில் வெற்றி

திருப்போரூரில் வெற்றி

இதில் நாகை தொகுதியில் போட்டியிட்ட ஆளுர் ஷானவாஸ் வெற்றி பெற்றுள்ளார். திருப்போரூர் தொகுதியில் போட்டியிட்ட பாலாஜியும் வெற்றி பெற்றுள்ளார். மற்ற இரண்டு தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னிலையில் உள்ளது.

பா ரஞ்சித் வாழ்த்து

பா ரஞ்சித் வாழ்த்து

இதனைத்தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான தொல் திருமாவளவனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநரான பா ரஞ்சித் திருமாவளவனுக்கு சமூக வலைதளம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2 பொது தொகுதியிலும்

இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், சாதிய மதவாதத்திற்கு எதிராக வெளிப்படையாக தன்னையும், தன்னை சார்ந்த தொண்டர்களையும் வழி நடந்தி, பிடிவாதமாக தனிச்சின்னத்தில் போட்டியிட்டு தனித்தொகுதியில் மட்டும் இல்லாமல் இரண்டு பொதுதொகுதியிலும் வெற்றிபெற்று சாதனை படைத்திருக்கும் விசிக& தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு வாழ்த்துகள்! என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X