அம்பேத்கர் வாழ்க்கையை கையில் எடுத்த பா. ரஞ்சித்: எதுக்காக இந்த அவசர முடிவுன்னு தெரியுமா?

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பா. ரஞ்சித் தற்போது நட்சத்திரம் நகர்கிறது படத்தை இயக்கியுள்ளார்.

Recommended Video

Kalidas Jayaram | இந்த படத்துல நடிக்கல, வாழ்ந்து இருக்கேன்.. காளிதாஸ் உருக்கம்| *Launch

நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் வரும் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

அடுத்து விக்ரம் நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார் இயக்குநர் பா. ரஞ்சித்.

அரசியல் பேசும் பா. ரஞ்சித்

அரசியல் பேசும் பா. ரஞ்சித்

'அட்டக்கத்தி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ரஞ்சித், தனது படங்களில் அரசியல் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அட்டக்கத்தி படம் காதல் பின்னணியில் உருவாகியிருந்தாலும், அதில் சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு குடியமர்த்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வியலை யதார்த்தமாக பதிவு செய்திருப்பார். அதேபோல், 'மெட்ராஸ்' படம் முழுவதும் வடசென்னை கதைக்களத்தில் அரசியல் பேசியிருப்பார்.

கபாலி, காலாவிலும் அரசியல்

கபாலி, காலாவிலும் அரசியல்

முதல் இரண்டு படங்களும் ஹிட் ஆனதை தொடர்ந்து, மூன்றாவது படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் கூட்டணி வைத்தார் ரஜினி. இந்தக் கூட்டணியில் கபாலி திரைப்படம், ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 'காலா' படத்திலும் ரஞ்சித், ரஜினி கூட்டணி மாஸ் காட்டியது. இந்த இரண்டு படங்களுமே தீவிரமாக அரசியல் பேசியிருந்தன. தனது படங்களில் எவ்வித சமரசமும் இல்லாமல் அரசியலை மிகத் தீவிரமாக எடுத்துவைத்தார் ரஞ்சித்.

புதிய கதைக்களத்தில் ரஞ்சித்

புதிய கதைக்களத்தில் ரஞ்சித்

பா. ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக வெளியான 'சார்பட்டா பரம்பரை. திரைப்படம், நேரடியாக அமேசானில் வெளியானது. ஆர்யா நடித்திருந்த குத்துச் சண்டை பின்னணியில் உருவாகியிருந்த இந்தப் படம், சென்னையின் அரசியல் வரலாறு குறித்து ஆழமாக பேசியது. இதனைத் தொடர்ந்து தற்போது ரஞ்சித் இயக்கியுள்ள 'நட்சத்திரம் நகர்கிறது' திரைப்படம், காதலையும் அதன் பின்னால் இருக்கும் பிரச்சினைகள் குறித்தும் பேசும் என சொல்லப்படுகிறது. அதேபோல், இந்தப் படத்தில் ரஞ்சித்தின் அரசியல் டச் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு

அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு

'நட்சத்திரம் நகர்கிறது' திரைப்படம், வரும் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையடுத்து விக்ரம் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் ரஞ்சித். இந்நிலையில், நட்சத்திரம் நகர்கிறது படம் குறித்து பேசியிருந்த ரஞ்சித், அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மிக முக்கியமான அறிவிப்பு

மிக முக்கியமான அறிவிப்பு

அம்பேத்கரின் வாழ்க்கையில் உள்ள ஒரு முக்கியமான பகுதியை மட்டும், அதில் எடுத்துக்காட்டவுள்ளதாக கூறியுள்ளார். மேலும், அது இந்தியாவின் மிக முக்கியமான அரசியல் மாற்றத்திற்கான காலம் எனவும், அதனை இப்போது படமாக எடுக்க ஆர்வம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தனது படங்களில் தீவிரமாக அரசியல் கருத்துகளை பேசி வரும் ரஞ்சித், தனது சமூக வலைத்தளங்களில் 'பீம்ஜி' என்ற பெயரிலேயே இயங்கி வருகிறார். இந்நிலையில், அம்பேத்கர் பற்றி படம் எடுக்கவுள்ளதாக ரஞ்சித் அறிவித்துள்ளாது, ரொம்பவே முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X