பிரிவினைவாதம் தலைவிரித்தாடுகிறது …பா.ரஞ்சித் ஆவேச பேச்சு !

சென்னை : பிரிவினைவாதம் தலைவிரித்தாடுகிறது என இயக்குநர் பா.ரஞ்சித் நிகழ்ச்சி ஒன்றில் ஆவேசமாக பேசியுள்ளார்.

Recommended Video

PA Ranjith Speech | 'இவங்களுக்கு ஜாதியே தெரியாது! பாவம்!' | Oneindia Tamil

சென்னை 28 திரைப்படத்தில் துணை இயக்குனராக பணியாற்றிய பா. ரஞ்சித், அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் திரைப்படத்திலேயே வித்தியாசமான கதையை கொடுத்து மக்கள் மத்தியில் பெயர் எடுத்தார்.

முதல் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மெட்ராஸ் திரைப்படத்தை இயக்கினார். சுவரில் நடக்கும் அரசியல் சண்டை குறித்து அப்பட்டமாக காட்சிப்படுத்தி அனைவர் மனதிலும் இடத்திலும் நன்மதிப்பை பெற்றார்.

பா ரஞ்சித்

பா ரஞ்சித்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா என அடுத்தடுத்த படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக மாறிவிட்டார் பா. ரஞ்சித். சமுகத்தின் மீதும் சமுதாயத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்ட பா. ரஞ்சித். சமூக கருத்துடைய படங்களை இயக்கி வருகிறார்.

நாடகங்கள் பிடிக்கும்

நாடகங்கள் பிடிக்கும்

சென்னை ஐ.சி.எப். அரங்கில் நடைபெற்ற விழா ஒன்றில் பிரபல திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கலந்துக் கொண்டு பேசினார். அதில், சினிமாவுக்கு வருவதற்கு முன்பாக கல்லூரி காலங்களில் நாடகங்களில் நான் நடித்து இருக்கிறேன். சினிமாவை போன்றே எனக்கு நாடகங்களையும் பிடிக்கும் என்றார்.

பிரிவினைவாதம் தலைவிரித்தாடுகிறது

பிரிவினைவாதம் தலைவிரித்தாடுகிறது

தற்போது நாட்டில் பிரிவினைவாதம் தலைவிரித்து ஆடுகிறது. இந்த காலகட்டத்தில் நாம் மனித நேயத்தையும் சமத்துவத்தையும் கலைகளின் வாயிலாக பரப்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். சினிமா, நாடகங்கள், பாடல்கள், ஓவியங்கள், புகைப்படங்கள் என என்னென்ன கலைகள் உள்ளதோ அனைத்தின் மூலமாகவும் அன்பை திளைக்க செய்ய வேண்டும். மனித மாண்பை மீட்டெடுக்க நாம் தொடர்ந்து செயல்படுவோம் என்றார்.

நட்சத்திரம் நகர்கிறது

நட்சத்திரம் நகர்கிறது

பா ரஞ்சித் ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை என்ற படம் இயக்கி இருந்தார். இப்படம் ஓடிடியில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது. தற்போது, நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில், காளிதாஸ் ஜெயராம், துஷாரா, டான்ஸிங் ரோஸ் ஷபீர் உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X