twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இதுதாங்க காலா.. கரிகாலாவோட போராட்டம்... பா. ரஞ்சித் சொல்வதைக் கேளுங்க

    மனிதமாண்புகளை மீட்டெடுக்கும் போராட்டமே காலா படத்தின் மையக்கரு என இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.

    |

    Recommended Video

    காலா கதையை விவரித்த இயக்குனர் பா. ரஞ்சித்- வீடியோ

    சென்னை: மனிதமாண்புகளை மீட்டெடுக்கும் போராட்டமே காலா படத்தின் மையக்கரு என அப்படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.

    கபாலி பட வெற்றியைத் தொடர்ந்து, ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் ரஜினி நடித்துள்ள படம் காலா. தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    Director Pa.Ranjith in kaala audio release

    இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டு மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.

    இதில் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித், எளிய மக்களின் பிரச்சினைகளையும், அவர்களுக்கு எதிரான அரசியலையும் காலா படம் பேசும் எனக் கூறினார்.

    விழாவில் பேசிய பா.ரஞ்சித், " மகிழ்ச்சி. என் மீது நம்பிக்கை வைத்து, எனக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்த ரஜினி சாருக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    கபாலி படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்தன. அந்த படத்தில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கருத்துக்களை சொன்னேன். சினிமாத்தனமாக படம் செய்ய எனக்கு விருப்பமில்லை. காலா படம் மக்களின் சினிமா. இந்த படத்தில் பேசப்பட்டுள்ள அரசியல் மிகவும் முக்கியமானது. மக்களின் பிரச்சினைகளை பற்றி பேசியுள்ளோம். ரஜினியின் குரல் மிகவும் சக்தி வாய்ந்தது.

    தாராவி செ ட் போட தினமும் சுமார் 800 பேர் வேலை செய்தார்கள். தொழிலாளர்கள் இல்லை என்றால் எதுவும் இல்லை. மனித மாண்புகளை மீட்டெடுப்பது தான் மிகவும் முக்கியமானது. அதற்கான போராட்டமாக இந்த படம் இருக்கும். நிலம் ரொம் முக்கியமானது. சுதந்திரம் அடைந்து இத்தனை காலம் ஆகியும், இன்னும் 60 சதவீத மக்களுக்கு ஏன் நிலம் இல்லை. இந்த கேள்வியை காலா எழுப்பும்."

    இவ்வாறு அவர் பேசினார். படத்தில் வேலை பார்த்த அத்தனை பேருக்கும் அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

    English summary
    While Speaking in Kaala function, director Pa.Ranjith has said that the film will speak the politics behind poor people.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X