Pa.Ranjith - இளையராஜாவை சந்தித்த பா.இரஞ்சித்.. என்ன காரணமாக இருக்கும்?.. ட்ரெண்டாகும் புகைப்படம்

சென்னை: Pa.Ranjith Met Ilayaraaja (இளையராஜாவை சந்தித்த பா.இரஞ்சித்) இசைஞானி இளையராஜாவை இயக்குநர் பா.இரஞ்சித் நேரில் சந்தித்த புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் 80கள், 90களில் ஆதிக்க சாதிகளை மையப்படுத்தி திரைப்படங்கள் வந்துகொண்டிருந்தன. அதேபோல் திரைப்படத்தின் தலைப்பிலேயே சாதி பெயரை வைத்தும் திரைப்படங்கள் வந்திருக்கின்றன. தற்போது தமிழ் சினிமாவில் ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை கூறுவதுபோல் திரைப்படங்கள் வர ஆரம்பித்திருக்கின்றன.

Director Pa.Ranjith Met Music Director Ilayaraaja

விதை போட்ட இயக்குநர் பா.இரஞ்சித்: ஒடுக்கப்பட்டவர்கள் தொடர்பாகவும், ஆதிக்கத்தை எதிர்த்து கேள்வி கேட்பதுபோலவும் திரைப்படங்கள் அதிகம் வர ஆரம்பித்ததற்கு விதை போட்டது பா.இரஞ்சித். அட்டக்கத்தியில் ஆரம்பித்த அவரது பயணம் மெட்ராஸ் படத்தில் உச்சம் சென்றது. அந்தப் படத்தில் பல காட்சிகள் ஆதிக்கவர்க்கத்தினரை ஒடுக்கப்பட்டவர்கள் கேள்வி கேட்பதுபோல் இருக்கும். அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டானது. அதன் பிறகு அவர் இயக்கிய காலா, கபாலி உள்ளிட்ட படங்களும் அதே ஜானரில் வந்தன. இரஞ்சித் தொடங்கிவைத்த இந்த கலாசாரத்தை பலர் வரவேற்றனர்.

மாரி செல்வராஜ், வெற்றிமாறன்: அவர் இவ்வாறு படம் எடுக்க ஆரம்பித்ததை அடுத்து பல படைப்பாளிகள் ஒடுக்கப்பட்டவர்களுக்காக படம் எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் வெற்றிமாற்ன, மாரி செல்வராஜும்கூட அடக்கம். சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில்கூட பா.இரஞ்சித் போன்றவர்கள் தமிழ் சினிமாவுக்கு கிடைத்தது பெரிய வரப்பிரசாதம் என்று மணிரத்னம் புகழ்ந்திருந்தார். அவர் மட்டுமின்றி பல இயக்குநர்கள் இரஞ்சித்தை மனதார பாராட்டிவருகின்றனர்.

தங்கலான்: அவரது இயக்கத்தில் கடைசியாக நட்சத்திரம் நகர்கிறது படம் சரியாக போகவில்லை. அதனையடுத்து அவர் இப்போது விக்ரமை வைத்து தங்கலான் படத்தை இயக்கியிருக்கிறார். படமானது அடுத்த வருட தொடக்கத்தில் ரிலீஸாகவிருக்கிறது. கோலார் தங்க வயலில் மக்கள் பட்ட கஷ்டங்களை மையப்படுத்தி பீரியட் ஜானரில் இருந்தப் படம் உருவாகியிருக்கிறது. இப்படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப திட்டமிருப்பதாகவும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இசைஞானி ரசிகன்: பா.இரஞ்சித் இசைஞானி இளையராஜாவின் தீவிர ரசிகர் ஆவார். அவர் இயக்கிய மெட்ராஸ் உள்ளிட்ட படங்களின் சில காட்சிகளில்கூட இளையராஜாவின் பாடலை பயன்படுத்தியிருப்பார். இந்நிலையில் அவர் இன்று இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்தார். அப்போது பாபா சாகேப்பின் காதல் கடிதம் புத்தகத்தை பரிசாக கொடுத்தார்.

அம்பேத்கர் தனது மனைவிக்கு எழுதிய காதல் கடிதங்களை உள்ளடக்கியதுதான் அந்தப் புத்தகம். பா.இரஞ்சித் மரியாதை நிமித்தமாக இளையராஜாவை சந்தித்ததாக ஒருபக்கம் கூறப்படுகிறது. அதேசமயம் இருவரும் இணைந்து பணியாற்றுவதற்கான முதல் படியாகவும் இந்த சந்திப்பு இருக்கலாம் என்றும் திரைத்துறையில் பேச்சு எழுந்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X