twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “ராஜாவை தினமும் ரசிக்கிறேன், ஆனால் அவரை நெருங்க தயக்கம் இருக்கு: ரஞ்சித் இப்படி சொல்ல காரணம் என்ன?

    |

    சென்னை: பா. ரஞ்சித் இயக்கியுள்ள 'நட்சத்திரம் நகர்கிறது' திரைப்படம், வரும் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

    சந்தோஷ் நாராயணனை விட்டு பிரிந்த ரஞ்சித், இந்தப் படத்தில் முதன்முறையாக இசையமைப்பாளர் தென்மாவுடன் கூட்டணி வைத்துள்ளார்.

    ரஞ்சித் இயக்கவுள்ள விக்ரமின் புதிய படத்திற்கு இளையராஜா இசையமைக்கலாம் என சொல்லப்பட்ட நிலையில், ஜிவி பிரகாஷ் கமிட் ஆகியுள்ளார்.

    நட்சத்திரம் நகர்கிறது காதல் கதை மட்டும் இல்லை: LGBT குறித்த ரகசியத்தையும் உடைத்த பா. ரஞ்சித்! நட்சத்திரம் நகர்கிறது காதல் கதை மட்டும் இல்லை: LGBT குறித்த ரகசியத்தையும் உடைத்த பா. ரஞ்சித்!

    ரஞ்சித்தின் படங்களில் இசைக்கு முக்கியத்துவம்

    ரஞ்சித்தின் படங்களில் இசைக்கு முக்கியத்துவம்

    பா. ரஞ்சித் இயக்கிய முதல் படமான 'அட்டக்கத்தி', 2012ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி வெளியானது. இதே படத்தின் மூலம் தான் சந்தோஷ் நாராயணனும் இசையமைப்பாளராக அடியெடுத்து வைத்தார். இருவருமே புதியவர்களாக இருந்தாலும், பாடல்களுக்கும் பின்னணி இசைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தனர். 'அட்டக்கத்தி' படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது.

    தொடர்ந்து வெற்றியை பதிவு செய்த கூட்டணி

    தொடர்ந்து வெற்றியை பதிவு செய்த கூட்டணி

    முதல் படத்தைத் தொடர்ந்து ரஞ்சித் இயக்கிய 'மெட்ராஸ்', 'கபாலி', 'காலா', 'சார்பட்டா பரம்பரை' ஆகிய படங்களுக்கும் சந்தோஷ் நாராயணன் தான் இசை. முதல் படத்தில் இருந்தே ரசிகர்களை மிரட்டிய இந்தக் கூட்டணி, சார்பட்டா பரம்பரை படம் வரையிலும் இசையில் மேஜிக் செய்தது. இயக்குநருக்கும் இசையமைப்பாளருக்கும் இடையேயான புரிதல் அவ்வளவு எளிதாக அமைந்துவிடாது. ஆனால், ரஞ்சித் - சந்தோஷ் நாராயணன் கூட்டணி அதை சாத்தியப்படுத்தியது.

    யார் கண்ணு பட்டுச்சோ தெரியல?

    யார் கண்ணு பட்டுச்சோ தெரியல?

    அட்டகாசமான வெற்றிக் கூட்டணியாக வலம்வந்த ரஞ்சித்தும் சந்தோஷ் நாராயணனும் 'சர்பட்டா பரம்பரை' படத்துடன் பிரிந்தது. சந்தோஷ் நாராயணனால் தெருக்குரல் அறிவு புறக்கணிக்கப்பட்டதே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், ரஞ்சித் தற்போது இயக்கியுள்ள 'நட்சத்திரம் நகர்கிறது' படத்துக்கு தென்மா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

    இசைஞானி இளையராஜாவுடன்?

    இசைஞானி இளையராஜாவுடன்?

    விக்ரமின் அடுத்த படத்தை இயக்கவுள்ள ரஞ்சித், அதில் இளையராஜாவுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல் பரவியது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விக்ரம் நடிக்கும் படத்தின் இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் குமார் கமிட் ஆனார். இந்நிலையில், இளையராஜாவுடன் பணிபுரிவது குறித்து ரஞ்சித் மனம் திறந்துள்ளார்.

    தூர நின்று மட்டும் பார்ப்பேன்

    தூர நின்று மட்டும் பார்ப்பேன்

    அதில், "எனக்கு ரொம்ப பிடித்தவர்களை தூர நின்று பார்ப்பேன். இசைஞானியோடு இணைந்து வேலை செய்ய முடியும்னு இன்றுவரை நான் நினைத்ததில்லை. அவர் கிட்ட நெருங்கவே தயக்கமா இருக்கு. அவர் பெரிய மேதை. இளையராஜா இல்லையென்றால் நான் சினிமாவிற்கு வந்திருக்கவே முடியாது. எனக்கு வழிகாட்டிய என் முன்னத்தி ஏரை நம்பித்தான் எங்கள் வீட்டில் என்னை சினிமாவுக்கு அனுப்பி வைத்தார்கள். அவர் பாடல்கள் எனக்கு சினிமா பாடல்கள்களாய் இல்லாமல் தன்னம்பிக்கை பாடல்களாக இருந்திருக்கிறது. ராஜாவை தினம் தினம் ரசிப்பவன் நான்" என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

    English summary
    Director Pa Ranjith said that I never thought that I would be able to work with Illayaraja. Also, he is reluctant to get close to Ilayaraja. has told ( இளையராஜாவோடு இணைந்து வேலை செய்ய முடியும் என்று இதுவரை நான் நினைத்ததில்லை என இயக்குநர் ரஞ்சித் தெரிவித்துள்ளார். மேலும், இளையராஜாவின் அருகில் நெருங்கவே தயக்கமாக இருப்பதாகவும் அவர். கூறியுள்ளார் )
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X