சூப்பர் ஸ்டார் படத்தை திட்டமிட்டே தோல்வி படமா மாத்துனாங்க - பிரபல இயக்குநர் ஓபன்!

சென்னை: தமிழ் சினிமாவில் அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் தான். இதனாலேயே அவரை தலைவர் என ரசிகர்கள் பாசத்தோடு அழைக்கின்றனர். திரைத்துறையில் இருக்கும் பலரும் தலைவர் என்றே பல இடங்களில் குறிப்பிடுகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் ரிலீஸ் ஆகின்றது என்றால், அவருக்கு இருக்கும் கோடான கோடி ரசிகர்கள் தியேட்டரையே திருவிழாவாக மாற்றி விடுவார்கள். இந்நிலையில் பிரபல இயக்குநர் ஒருவர், சூப்பர் ஸ்டார் நடித்த படத்தை திட்டமிட்டே தோல்விப்படமாக மாற்றினார்கள் எனக் கூறியுள்ளார். இது குறித்து பார்க்கலாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் வேட்டையன். இந்தப் படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகின்றது. அதையடுத்து தற்போது நடித்துக் கொண்டு இருக்கும் படம், கூலி. இந்தப் படத்தினை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகின்றார். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் காலா. இந்தப் படத்தை இயக்கியவர் இயக்குநர் பா. ரஞ்சித்.

Pa Ranjith Rajinikanth Kaala

எது வெற்றி: காலா படத்தினை திட்டமிட்டே தோல்விப்படமாக மாற்றினார்கள் என இயக்குநர் பா. ரஞ்சித் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அது குறித்து பார்க்கலாம். என்னைப் பொறுத்தவரையில் வெற்றி என்பது மக்கள் படத்தை ஏற்றுக்கொள்வது, அதனைக் கொண்டாடுவது, படம் கூறுவதை புரிந்துகொள்வது, எனது தயாரிப்பாளர் படத்தை என்னவாக பார்க்கின்றார் என இவையெல்லாம் சேர்ந்ததுதான். அதேநேரத்தில் பொது சமூகம் அளவிடும் வெற்றி தோல்வி மீது ஒரு பார்வை இருக்கின்றது. ஆனால் பாபாசாகேப் அம்பேத்கர் கூறியதைப் போல், " யாராலும் புறக்கணிக்க முடியாத வெற்றியை" நோக்கி நகரனும் என நினைப்பேன். புறக்கணிக்க முடியாத வொர்க் ஆஃப் ஆர்ட் படைக்கவேண்டும் என நினைப்பேன்.

Pa Ranjith Rajinikanth Kaala

காலா: காலா படத்தினை திட்டமிட்டு தோல்விப் படமாக மாற்றினார்கள். காலாவில் நடைபெற்றது என்பது திட்டமிட்டு நடத்தப்பட்டது. திட்டமிட்டு தோல்விப் படமாக மாற்றியது குறித்து யாருமே பேசவில்லை. அது குறித்து நான் பேசினால் மிகப்பெரிய விவாதம் இங்கு உருவாகும். சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கின்ற படமா என்றால், திருப்தி அளிக்காத படம்தான். ஆனால் புறக்கணிக்க வேண்டிய, நிராகரிக்க வேண்டிய படமா என்றால், இல்லை எனக் கூறுவேன்.

Pa Ranjith Rajinikanth Kaala

1000 காரணங்கள்: படத்தினைக் கொண்டாட பல காரணங்கள் இருந்தது. ரசிகர்கள் பல காட்சிகளை தங்களுடன் இணைத்து வைத்துப் பார்த்தார்கள். ரசிகர்கள் சந்தோசப்பட்டார்கள். படத்தில் தரமான காதல் காட்சிகள் இருந்தது. கொண்டாடுவதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்தது. வெறுப்பதற்கு சில காரணங்களைக் கொண்டு ஒட்டுமொத்த படத்தையும் நிராகரிப்பது என்பதை புரிந்து கொண்டேன். ஆனாலுமே இதை நான் ஒரு குறையாக சொல்ல விரும்பவில்லை. இவர்கள் வேண்டுமென்றே வன்மைத்தை வைத்து எனது படத்தை நிராகரிக்கின்றார்கள் எனக் கூறவில்லை. மாறாக, சில உண்மையாக காரணங்களும் உள்ளது. அதனால் ரசிகர்களுக்கு திருப்தி அளிக்ககூடிய படமாகவும் அது இல்லை என்பதை புரிந்து கொள்கின்றேன். இதை அடுத்த படத்தில் சரி செய்ய முயற்சித்துள்ளேன்" இவ்வாறு பேசிய்டுள்ளார்.

Pa Ranjith Rajinikanth Kaala

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X