Suriya 45: சூர்யா ரசிகர்களே தயாரா? ரெண்டு வாரத்தில் சூர்யா 45 அறிவிப்பு வருது.. பா. ரஞ்சித் ஓபன் டாக்
சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் தமிழ் சினிமாவில் இருக்கக்கூடிய டாப் இயக்குநர்களில் ஒருவராக உள்ளார். இவரது படங்கள் என்றால், விமர்சன ரீதியாக மட்டும் இல்லாமல், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிப் படங்களாக மாறி வருகின்றது. இறுதியாக இவரது இயக்கத்தில் வெளியாகியுள்ள படமான தங்கலான் படம், ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது. இந்த படம் குறித்து பா. ரஞ்சித் புதிய தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் தங்கலான். இந்தப் படத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் இந்தியிலும் படம் ரிலீஸ் ஆகவுள்ளது.

இயக்குநர் பா. ரஞ்சித் இதுவரை அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கின்றது மற்றும் தங்கலான் என மொத்தம் ஏழு படங்களை இயக்கியுள்ளார். இது இல்லாமல் தம்மம் என்ற ஆந்தாலஜி படத்தினையும் இயக்கியுள்ளார். இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் பெரும் வெற்றி பெற்றுள்ளது.
சூர்யா 45: சூர்யாவின் 45வது படத்திற்கு ஜெர்மன் என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தினை தங்கலான் படத்தினைத் தயாரித்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கின்றது. மேலும் இது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் 25வது படமாகவும் உருவாகவுள்ளது. இந்தப் படத்தின் பூஜை சென்னையில் நேற்று அதாவது ஆகஸ்ட் 21ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் பாடலாசிரியர் மதன் கார்க்கியும் கலந்து கொண்டுள்ளார்.

இரண்டாம் உலகப்போர்: இந்த பூஜையின்போது படத்தின் போஸ்டரும் இடம் பெற்றுள்ளது. அதில் வானத்தில் இருந்து போர் விமானத்தில் இருந்து, பாராசூட் மூலம் ஒருவர் குதிப்பதைப் போல் இருக்கின்றது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. பா. ரஞ்சித் இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள தங்கலான் படத்தினையும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்தது. அதே நிறுவனம்தான் தற்போது ஜெர்மன் படத்தையும் தயாரிக்கின்றது. இரண்டாம் உலகப்போரை மைய்யப்படுத்திய கதைக்களமாக இருக்கும் என கூறப்படுகின்றது.

கங்குவா: அதேபோல், சூர்யாவின் கங்குவா படத்தினையும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்தப் படத்தினை இயக்குநர் சிவா இயக்கியுள்ளார். மேலும் இதே தேதியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் வேட்டையன் படமும் ரிலீஸ் ஆகவுள்ளது. இது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஞ்சித் பதில்: இந்நிலையில் இயக்குநர் பா. ரஞ்சித்திடம் ஜெர்மன் படம் தொடர்பான கேள்வி முன்வைக்கப்பட்டது. ஆனால் அவரோ, இதற்கு நேரடியாக பதில் அளிக்காமல், இந்த வாரம் அல்லது அடுத்த வாரத்தில் இது குறித்து தெரிவிக்கின்றேன் எனக் கூறியுள்ளார். மேலும் சூர்யாதான் கதாநாயகனா எனவும், ஸ்டூடியோ க்ரீன் தான் தயாரிப்பு நிறுவனமா எனவும் கேள்வி கேட்டதற்கு 'அப்படியா' என சிரித்துக் கொண்டே கூறினார். இயக்குநர் ரஞ்சித்தின் இந்த பதிலால் சூர்யா ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.



Click it and Unblock the Notifications











