Pa Ranjith: மெட்ராஸ் படம்தான் கபாலி படத்துக்கு ரூட் போட்டு கொடுத்துச்சு.. சீக்ரெட் சொன்ன பா ரஞ்சித்!
சென்னை: இயக்குநர் பா ரஞ்சித் மெட்ராஸ் படத்தில் துவங்கிய பயணத்தை அதிரடியாக தொடர்ந்து வருகிறார். அடுத்ததாக ஆர்யா. அட்டக்கத்தி தினேஷ் மற்றும் அசோக் செல்வன் கூட்டணியில் வேட்டுவம் என்ற படத்தை இவர் இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து சார்பட்டா பரம்பரை 2 அல்லது தங்கலான் 2 படங்களில் இவர் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் 2024ம் ஆண்டு நிறைவடைவதை ஒட்டி நடத்தப்பட்ட டைரக்டர் ரவுண்ட் டேபிள் 2024 நிகழ்ச்சியில் பேசிய பாரஞ்சித் மெட்ராஸ் படம் குறித்தும் அந்த படம் அடுத்தடுத்து பெற்றுக் கொடுத்த வாய்ப்புகள் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அவரது இந்த பேட்டி மெட்ராஸ் படத்தின் சூட்டிங்கிற்கு முன்னதாக நடந்த பல விஷயங்களை நினைவு கூர்வதாகவும் அமைந்திருந்தது.

இயக்குநர் பா ரஞ்சித்: இயக்குநர் பா ரஞ்சித் மெட்ராஸ் படம் மூலம் தன்னுடைய என்ட்ரியை தமிழ் சினிமாவில் துவங்கியவர். தொடர்ந்து ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து அடுத்தடுத்த சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார் ரஞ்சித். சமீபத்தில் இவரது இயக்கத்தில் விக்ரம் இரட்டை வேடங்களில் நடித்து வெளியான தங்கலான் படம் சுதந்திரப் போராட்ட காலத்தின்போது கேஜிஎப் பகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்க்கையை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. படத்தின் ஒவ்வொரு கேரக்டரும் அந்த காலத்திய மக்களின் வாழ்க்கையை கூறும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.
தங்கலான் படம்: இந்த படத்தின்மூலம் தற்போதைய இளம் தலைமுறைக்கும் அந்த காலகட்டத்தில் அப்பகுதியில் தங்கம் வெட்டியெடுக்கப்பட்ட வரலாறு தெரியும்வகையில் புரிதலை பா ரஞ்சித் ஏற்படுத்தியிருந்தார். இந்நிலையில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வரும் பா ரஞ்சித் சமூகவெளியிலும் தன்னுடைய கருத்துக்களை அதிரடியாக வெளிப்படுத்தி வருகிறார். அடுத்ததாக ஆர்யா, அட்டக்கத்தி தினேஷ், அசோக் செல்வன் லீட் கேரக்டர்களில் நடிக்கவுள்ள வேட்டுவன் என்ற படத்தை இவர் இயக்கவுள்ளதாக அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சார்பட்டா பரம்பரை 2 படத்தை பா ரஞ்சித் இயக்க உள்ளதாக கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது அடுத்தப்படம் குறித்து அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
சார்பட்டா பரம்பரை 2 படம்: முன்னதாக இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகி சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் வடசென்னையில் வாழ்ந்த குத்துச்சண்டை குழுக்களின் வாழ்க்கையை, அவர்களின் போட்டி உள்ளிட்ட பலவற்றை சிறப்பான கதைக்களமாக கொடுத்திருந்தது. ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த இந்த படத்தின் 2வது பாகம் எப்படி அமையும் என்பது குறித்து ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். இந்நிலையில் இந்த 2024ம் ஆண்டு நிறைவடைவதை ஒட்டி இயக்குநர்கள் ரவுண்ட் டேபிள் 2024 நடத்தப்பட்டது. இதில் பேசிய இயக்குநர் பா ரஞ்சித் தான் படம் இயக்குவதற்காக ஸ்டூடியோ கிரீனை அணுகியது குறித்து பேசியுள்ளார்.
உறுதியாக இருந்த பா ரஞ்சித்: அப்போது இரண்டு படங்களின் ஸ்கிரிப்ட் தன்னிடம் இருந்ததாக பா ரஞ்சித் தெரிவித்துள்ளார். மஞ்சள் நீலம் சிவப்பு மற்றும் மெட்ராஸ் என தன்னிடம் இரு ஸ்கிரிப்ட்கள் இருப்பதை தயாரிப்பு தரப்பிடம் தான் கூறியதாகவும் அதில் ஒன்றை தான் இயக்கவுள்ளதாக தெரிவித்ததாகவும் அப்படி இல்லையென்றால் சார்பட்டா பரம்பரை படத்தை இயக்கும் திட்டமும் தன்னிடம் இருந்ததாகவும் பா ரஞ்சித் தெரிவித்துள்ளார். இதை கேட்ட தயாரிப்பு தரப்பினர், மெட்ராஸ் படத்தை ஓகே செய்ததாக தெரிவித்துள்ளார். மஞ்சள் நீலம் சிவப்பு படத்தின் கதை மிகவும் ஆர்டிஸ்ட்டிக்காக இருப்பதாக அவர்கள் தெரிவித்ததாகவும் ரஞ்சித் கூறியுள்ளார்.
சுவரை ஒட்டிய அரசியல்: அதனால் மெட்ராஸ் படமே இறுதி செய்யப்பட்டதாகவும் பா ரஞ்சித் தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கு முதலில் ரஜினி என்று டைட்டில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் மெட்ராஸ் படம் தனக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்றுத் தந்ததாகவும் ரஜினிகாந்தின் கபாலி படத்தை இயக்கும் வாய்ப்பு மெட்ராஸ் படம் மூலமாகவே கிடைத்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். மெட்ராஸ் படத்தின் கதை மிகவும் தனித்தன்மையாக உருவாக்கப்பட்டிருந்தது. ஒரு சுவற்றிற்காக நடத்தப்படும் அரசியலை இந்தப்படம் பேசியது. வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை இந்த படம் சுட்டி காட்டியது. இந்த படம் நடிகர் கார்த்தியின் கேரியரில் பெஸ்ட்டாக அமைந்தது.


Click it and Unblock the Notifications











