Director Pa Ranjith: தங்கலான் படம் குறித்த வதந்திகளை நம்பாதீங்க.. பா ரஞ்சித் பரபரப்பு!
சென்னை: விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் தங்கலான். சுதந்திர போராட்ட காலகட்டத்தில் கேஜிஎப் பகுதியில் வாழ்ந்த தமிழர்களை மையமாகக் கொண்டு இந்த படத்தின் கதைகளம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் டீசர், போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன. கடந்த ஆண்டிலேயே இந்த படத்தின் சூட்டிங் நிறைவடைந்த நிலையில் தற்போது படத்தின் அனைத்து வேலைகளும் நிறைவடைந்துள்ளதாக படத்தின் இயக்குனர் பா ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
படம் ரிலீசுக்கு தயாராக உள்ளதாகவும் வரும் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அதையொட்டி இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் பா ரஞ்சித் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். முன்னதாக விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் படமும் பல்வேறு காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளிப் போகிறது. இதே போல தங்கலான் படமும் அடுத்தடுத்து ரிலீஸ் தேதிகளை தெரிவித்து ஆனால் ரிலீசாகாமல் உள்ளது. இதனால் விக்ரம் ரசிகர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்தில் உள்ளனர். இதனிடையே விக்ரம் தனது அடுத்த படத்தில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.

தங்கலான் படம்: இயக்குனர் பா ரஞ்சித் மற்றும் நடிகர் விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தங்கலான். இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டிலேயே நிறைவடைந்த நிலையில் படம் தொடர்ந்து ரிலீஸ் தேதி தள்ளிப் போகிறது. கடந்த ஜனவரியிலேயே இந்த படம் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மார்ச் மாதம் வந்த பிறகும் இந்த படத்தின் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் எந்தவிதமான அப்டேட்டும் கொடுக்காமல் உள்ளனர். இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். விக்ரமின் துருவ நட்சத்திரம் படமும் ரிலீசுக்கு தவித்து வரும் நிலையில் தங்கலான் படமும் ரிலீசாகாமல் உள்ளது அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் ஏமாற்றத்தை கொடுத்து வருகிறது.
இயக்குநர் பா ரஞ்சித் உறுதி: இந்நிலையில் தங்கலான் படம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று படத்தின் இயக்குனர் பா ரஞ்சித் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து தனது சமீபத்திய பேட்டியில் படம் குறித்த பல விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டையும் அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். தங்கலான் படம் சுதந்திரப் போராட்ட காலத்தை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ளது. சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் கேஜிஎஃப்-இல் வேலை செய்த தமிழர்களை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் படத்தில் இரு வேறு கெட்டப்களில் விக்ரம் மாஸ் காட்டியுள்ளார்.
ரசிகர்கள் ஆர்வம்: படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உஉள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் போஸ்டர்கள் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து படத்திற்கான எதிர்பார்ப்பையும் எகிற செய்துள்ளது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். முன்னதாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் விக்ரமின் பொன்னியின் செல்வன் 2 படம் வெளியானது. இந்தப் படத்தில் ஆதித்ய கரிகாலன் கேரக்டரில் அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்தப் படம் அவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுக் கொடுத்த போதிலும் மல்ட்டி ஸ்டாரர் படம் என்பதால் அவருக்கு இந்த படத்தில் காட்சிகள் குறைவாகவே அமைந்திருந்தது.
அடுத்தடுத்த படங்கள்: இதனால் விக்ரமின் அடுத்தடுத்த படங்களாக தங்கலான் மற்றும் துருவ நட்சத்திரம் படங்களின் ரிலீஸ் தேதியை ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். படம் குறித்து பல்வேறு வதந்திகள் உலா வரும் சூழலில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று பா ரஞ்சித் தெரிவித்துள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலின் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தங்களான் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பையும் படக்குழுவினர் செய்ய உள்ளதாகவும் அவர் தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார். எலக்ஷன் தேதி அறிவிக்கப்பட்ட உடனே இந்த படம் சென்சாருக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு: இந்த படத்தை தான் சமீபத்தில் பார்த்ததாகவும் படத்தின் முழு அவுட்புட் தன்னை வெகுவாக கவர்ந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதே போல ரசிகர்களையும் இந்த படம் மிகச் சிறப்பாக கவரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருந்த சூழலில் பா ரஞ்சித்தின் இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. இதனிடையே படம் ரிலீசுக்கு முன்னதாக ரிலீசாகுமா அல்லது தேர்தலை தொடர்ந்து வெளியாகுமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











