Pa Ranjith: இன்னா குத்து குத்துறாரு.. மார்கழியில் மக்களிசையில் சூப்பர் குத்தாட்டம் போட்ட பா ரஞ்சித்!

ஒசூர்: இயக்குநர் பா ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் மக்களிசை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. பாரம்பரிய இசைக்கலைஞர்கள், நடனக் கலைஞர்களை வைத்து பல இடங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான மார்கழியில் மக்களிசை 2023 நிகழ்ச்சி கேஜிஎஃப் பகுதியில் கடந்த 23ம் தேதி துவங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை இயக்குநர் பா ரஞ்சித் துவக்கி வைத்தார். தொடர்ந்து நேற்றைய தினம் ஓசூரில் இதன் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியில் பாரம்பரிய இசைக் கலைஞர்கள் நிகழ்த்திய இசை நிகழ்ச்சிகளை ஏராளமான மக்கள் விருப்பத்துடன் கண்டு களித்தனர்.

சென்னையிலும் இந்த நிகழ்ச்சி வரும் 28ம் தேதி துவங்கி 3 நாட்கள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒசூரில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியிம் இயக்குநர் பா ரஞ்சித் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிக்கு ஆண்டுதோறும் மக்களிடையே மிகுந்த வரவேற்பு காணப்படும் நிலையில், இந்த வருடமும் சென்னை, கோவை, மதுரை போன்ற இடங்களில் இந்த நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கேஜிஃஎப்பில் நிகழ்ச்சியில் நடிகர் தினேஷ், கலையரசன், எழுத்தாளர் தமிழ் பிரபா, இயக்குநர் தினகர், ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.

Director Pa Ranjith participate in Margazhiyil makkalisai and his dance makes fans impressed

இயக்குநர் பா ரஞ்சித்: இயக்குநர் பா ரஞ்சித் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார். இவரது படங்களில் உணர்வுபூர்வமான கதைக்களத்தை கொண்டுவருவதில் இவர் மிகுந்த கவனம் பெற்றுள்ளார். தற்போது விக்ரம் லீட் கேரக்டரில் நடித்துள்ள தங்கலான் படத்தை இயக்கியுள்ளார் பா ரஞ்சித். இந்தப் படம் ஜனவரியில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீலம் புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்திவரும் பா ரஞ்சித், அடுத்ததாக கள்ளிப்பால்ல ஒரு டீ என்ற ஆந்தாலஜி படத்தை தயாரித்து வருகிறார். இந்தப் படத்தை 4 பெண் இயக்குநர்கள் இயக்கவுள்ளனர்.

மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி: நீலம் பண்பாட்டு மையம் என்ற பெயரில் பண்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அந்த வகையில் மார்கழி மாதத்தில் ஆண்டுதோறும் மார்கழியில் மக்களிசை என்ற பெயரில் பாரம்பரிய இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இந்த ஆண்டும் மார்கழியில் மக்களிசை கடந்த 23ம் தேதி கேஜிஎஃப் பகுதியில் துவங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பல்வேறு பாரம்பரிய கலைஞர்கள் இசை நிகழ்ச்சிகளை நடத்தின. பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகள் அவர்களை வெகுவாக கவரும் வகையில் அமைந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பா ரஞ்சித், கேஜிஎஃப் மக்களின் அன்பு வியக்க வைப்பதாக தெரிவித்தார்.

குத்தாட்டம் போட்ட பா ரஞ்சித்: கலை மக்களை ஒருங்கிணைக்கும் ஆயுதமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து நேற்றைய தினம் ஒசூரிலும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஒசூரில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் பா ரஞ்சித், இசைக்கலைஞர்களின் இசை நிகழ்ச்சிக்கு சூப்பராக குத்தாட்டம் போட்டது பார்வையாளர்களை மிகவும் உற்சாகப்பட செய்துள்ளது. ஒருபுறம் இயக்கம், தயாரிப்பு என பிசியாக இருந்தாலும் இதுபோன்ற பண்பாட்டு நிகழ்ச்சிகளையும் நடத்தி வரும் பா ரஞ்சித் அனைவரையும் கவர்ந்து வருகிறார்.

தங்கலான் படம்: விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள தங்கலான் படத்தை இயக்கி முடித்துள்ளார் பா ரஞ்சித். சுதந்திர போராட்ட காலகட்டத்தில் கேஜிஎஃப் மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் அடுத்ததாக தன்னுடைய இயக்கத்தில் முன்னதாக வெளியான சார்பட்டா படத்தின் இரண்டாவது பாகத்தையும் உருவாக்கவுள்ளார். இதற்கான முன் தயாரிப்புப் பணிகளிலும் பிசியாகியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X