என்னை சார்ந்தவர்கள் என்னை போல் சிந்திப்பார்கள் என எப்படி எதிர்பார்க்கலாம்... குமுறும் பா ரஞ்சித்

சென்னை : சமுத்திரக்கனி லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரைட்டர் படம் வரும் 24ம் தேதி ரிலீசாக உள்ளது.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு தற்போது சென்னையில் நடைபெற்றுள்ளது.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் பா. ரஞ்சித் இந்த சந்திப்பில் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

ரைட்டர் படம்

ரைட்டர் படம்

சமுத்திரக்கனியின் சிறப்பான நடிப்பில் பா ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ரைட்டர். படத்தை பா ரஞ்சித்தின் உதவியாளர் ப்ராங்க்ளின் ஜோசப் இயக்கியுள்ளார். படத்தில் மேலும் ஹரிகிருஷ்ணன், லிஸ்ஸி ஆண்டனி, மகேஸ்வரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

24ம் தேதி ரிலீஸ்

24ம் தேதி ரிலீஸ்

வரும் 24ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. காவல் நிலையத்தில் ரைட்டராக பணிபுரியும் ஒருவரின் வாழ்க்கையை அழுத்தமாக கூறும் படமாக ரைட்டர் உருவாகியுள்ளது. படத்தை ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

 பத்திரிகையாளர் சந்திப்பு

பத்திரிகையாளர் சந்திப்பு

படத்தின் டீசர், ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் ப்ரமோஷன் பணிகளில் படக்குழுவினர் சிறப்பாக ஈடுபட்டுள்ளனர். இன்றைய தினம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பா ரஞ்சித் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்று பேசினர்.

 பா ரஞ்சித் குமுறல்

பா ரஞ்சித் குமுறல்

இந்த நிகழ்ச்சியில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் பா ரஞ்சித், தனது படங்களில் வேலை பார்த்த தொழில்நுட்ப கலைஞர்கள் முதல் நடிகர்கள் வரை அனைவரும் தன்னை போலவே சிந்திப்பார்கள் எனக்கூறி அவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இது அப்பட்டமான உண்மை என்றும் அவர் கூறியுள்ளார்.

அழுத்தமான கதை

அழுத்தமான கதை

படத்திற்கு 96 படப்புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். படத்தின் ட்ரெயிலர் மூலம் காவல்நிலையத்தில் எழுத்தராக பணியாற்றும் ஒருவர், மேலதிகாரிகள் உள்ளிட்டவர்களால் அவமதிக்கப்படும் சூழலை மையப்படுத்தி படத்தின் கதை அமைந்துள்ளது வெளிப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த தயாரிப்பு

அடுத்தடுத்த தயாரிப்பு

தன்னுடைய உதவி இயக்குநர்கள் 5 பேரை கொண்டு படங்களை தயாரிக்க உள்ளதாக முனனதாக பா ரஞ்சித் அறிவித்திருந்த நிலையில் முதலில் ரைட்டர் படம் தற்போது தயாரிக்கப்பட்டு வெளியாக உள்ளது. இந்தப் படம் சிறப்பான திரைக்கதையுடன் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X