ராசா கண்ணுவின் கதை போல பலகதைகள் இனி வரும்.. நம் தலைமுறையை மாற்றும்.. ஜெய் பீம்மை புகழ்ந்த இயக்குநர்!

சென்னை: சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ஜெய் பீம் படம் பாராட்டுக்களை குவித்து வரும் நிலையில் பிரபல இயக்குநர் படக்குழுவை புகழ்ந்து தள்ளியுள்ளார்

Recommended Video

Suriya -வின் ஜெய்பீம் பட சர்ச்சை, ஆதரவு கொடுக்கும் பிரபலம் | JaiBhim, PA.Ranjith, PC Sreeram

டிஜே ஞானவேல் இயக்கத்தில் வெளியான சூர்யா நடித்துள்ள படம் ஜெய் பீம். இந்த படத்தில் ஜோஸ் லிஜிமோல் , மணிகண்டன், பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன், எம்எஸ் பாஸ்கர், ஜெயபிரகாஷ், இளவரசு என பலர் நடித்துள்ளனர்.

அமேஸான் பிரைம் ஓடிடி தளத்தில் நேற்று இப்படம் வெளியானது. இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இருளர் இன மக்கள் சந்திக்கும் இன்னல்

இருளர் இன மக்கள் சந்திக்கும் இன்னல்

இதேபோல் படத்தை பார்த்த விஐபிக்களும் சினிமா பிரபலங்களும் படக்குழுவுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இருளர் இன மக்கள் காவல்துறையினரின் அத்தமீறலால் சந்திக்கும் பிரச்சனைகளை அழுத்தமாக பேசும் படமாக தயாரிக்கப்பட்டுள்ளது ஜெய் பீம்.

கண்களை குளமாக்கும் காட்சிகள்

கண்களை குளமாக்கும் காட்சிகள்

காவல் துறையினரின் அதிகார பவரில் இருளர் இன மக்கள் சந்தித்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. படத்தின் பல காட்சிகள் பார்வையாளர்களை கண் கலங்க வைக்கிறது. சமூக வலைதளங்களில் படத்திற்கு ஆதரவு குவிந்து வருகிறது.

ஜெய் பீம்மை பாராட்டிய கமல்

ஜெய் பீம்மை பாராட்டிய கமல்

இருளர் இன மக்களுக்காக போராடும் வழக்கறிஞராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள நடிகர் சூர்யாவையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ஏற்கனவே ஜெய் பீம் படத்தை பார்த்து முதல்வர் ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் ஆகியோர் பாராட்டி உள்ளனர்.

நம் தலைமுறையை மாற்றும்

நம் தலைமுறையை மாற்றும்

இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் பா ரஞ்சித் ஜெம் பீம் படத்தை பார்த்து விட்டு படக்குழுவை பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, சாதி எதிர்ப்பையும்,சாதி ஆதரவையும் சமநிலையில் பார்க்கும் சமூகத்தாரே-இதோ மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட ராசா கண்ணுவின் கதை போல பலகதைகள் இனி வரும். அது நம் தலைமுறையை மாற்றும். ஜெய்பீம் திரைப்படத்தை கொடுத்த திரு. சூர்யா, ஞானவேல், 2டி எண்டெர்டெய்ன்மென்ட், எஸ் ஆர் கதிர் மற்றும் டீம்முக்கு பெரும் நன்றிகள்! என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X