தித்திக்க வைத்திருக்கிறது சில்லுக்கருப்பட்டி – பா. ரஞ்சித் பாராட்டு!

சென்னை: ஹலீதா ஷமீம் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள சில்லுக்கருப்பட்டி படத்தை இயக்குநர் பா. ரஞ்சித் பாராட்டியுள்ளார்.

ஏற்கனவே ஸ்பெஷல் ஷோ போடப்பட்டு விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள சில்லுக்கருப்பட்டி படம் இன்று வெளியாகி வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

ஹலீதா ஷமீம் இயக்கத்தில் உருவாகியுள்ள சில்லுக்கருப்பட்டி படத்தில் சமுத்திரகனி, சுனைனா, லீனா சாம்சன், பேபி சாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நான்கு காதல்

நான்கு காதல்

இன்று வெளியாகியுள்ள சில்லுக்கருப்பட்டி படத்தில் நான்கு வித்தியாசமான காதல் கதை அழகாக கோர்க்கப்பட்டு ரசிகர்களின் மனங்களை வருடி வருகிறது. பேபி சாரா, குப்பை பொறுக்கும் சிறுவனின் குழந்தை காதல், காதலுக்காக இறுதிவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் லீனா சாம்சனின் ஓல்டு ஏஜ் காதல், மணிகண்டன், நிவேதிதாவின் கார் ஷேரிங் காதல் மற்றும் கடைசியாக சமுத்திரகனி, சுனைனாவின் திருமண காதல் என நான்கு வெவ்வேறு ருசிகளை அடுக்கி சில்லுக்கருப்பட்டியாக இயக்குநர் இந்த படத்தை கொடுத்துள்ளார்.

நான்கு கேமராமேன்கள்

நான்கு கேமராமேன்கள்

சில்லுக்கருப்பட்டி படம் நான்கு காதல் கதைகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இயக்குநர், ஒவ்வொரு கதைக்கும் தனி தனியான ஒளி அமைப்பு இருக்க வேண்டும் என்று கருதி நான்கு கேமராமேன்களை கொண்டு இந்த படத்தை வித்தியாசமாக உருவாக்கியுள்ளார். பிரபல ஒளிப்பதிவாளர்களான அபிநந்தன் ராமானுஜம், மனோஜ் பரமஹம்சா, விஜய் கார்த்திக் கண்ணன், யாமின் ஆகிய நால்வர் தான் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

சூர்யா வெளியீடு

சூர்யா வெளியீடு

ஹலீதா ஷமீம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை டிவைன் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. நடிகர் சூர்யாவுக்கு இந்த படம் மிகவும் பிடித்துப் போனதால், தனது 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக இந்த படத்தை அவரே வெளியிட்டுள்ளார்.

குவிகிறது பாராட்டு

குவிகிறது பாராட்டு

2019ம் ஆண்டின் இறுதியில் வெளியாகியுள்ள சில்லுக்கருப்பட்டி படத்திற்கு பல தரப்பு ரசிகர்களும், பிரபலங்களும் தங்களது பாராட்டுக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். அழகான வாழ்வியல் என்றும், காதல் எல்லா வயதிலும் இருக்கும் என்றும் பாராட்டி வருகின்றனர்.

தித்திக்க வைத்திருக்கிறது

இந்நிலையில், சில்லுக்கருப்பட்டி படத்தை பார்த்த இயக்குநர் பா. ரஞ்சித், "மிக சரியாக கோர்க்கப்பட்ட நான்கு கதைகள்! மனிதத்தின் தேவை அன்பு !!! திரை முழுக்க கடத்தி, பார்வையாளர்களை தித்திக்க வைத்திருக்கிறது. இந்த சில்லுக்கருப்பட்டி சுவைக்க தந்த ஹலீதா ஷமீம், சமுத்திரக்கனி, மணிகண்டன், சுனைனா குழுவினர்களுக்கு வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.

சுனைனா நன்றி

பா. ரஞ்சித் பாராட்டை பார்த்த நடிகை சுனைனா, உங்கள் பொன்னான நேரத்தை செலவு செய்து இந்த படத்தை பார்த்து எங்களை பாராட்டியதற்கு நன்றி என பா. ரஞ்சித் ட்வீட்டுக்கு கீழே கமெண்ட் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X