விக்ரமிற்கு தேசிய விருது கன்பார்ம்.. தங்கலான் மேக்கிங் வீடியோவை பார்த்து மிரண்ட ஃபேன்ஸ்!

சென்னை: தமிழ் சினிமாவில் நடிப்புக்காக எதையும் செய்ய தயராக இருக்கும் நடிகர் விக்ரம் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், தங்கலான் படக்குழுவினர் அப்படத்தின் மிரட்டலான மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் விக்ரம் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் விக்ரமின் மிரட்டலான நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் தான் தங்கலான். இப்படத்தில் விக்ரம் உடன் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். தங்கலான் படத்தின் மூலம் முதன்முறையாக பா ரஞ்சித்துடன் இணைந்துள்ளார் ஜிவி பிரகாஷ். இதனை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துடன் இணைந்து பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரித்துள்ளது.

Director Pa Ranjith shared thangalaan making video released chiyaan vikram birthday

தங்கலான்: தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. மிரட்டலான கூட்டணியில் உருவாகி உள்ள தங்கலான் திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. ரஞ்சித் எடுக்கும் ஒவ்வொரு திரைப்படமும் மாஸ்டர் பீஸ் திரைப்படங்களாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த வரிசையில் தங்கலான் திரைப்படமும் இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. விக்ரமின் திரைப்பயணத்தில் இந்த திரைப்படம் முக்கியமான படமாக இருக்கும்.

படத்தின் கதை: கேஜிஎஃப்பில் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் உண்மை சம்பவத்தை தழுவி இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. தங்கலான் என்றால், ஒடுக்கப்பட்டோர் இனத்தலைவன், ஊர்காவலன், எல்லை வீரன், மக்களின் பாதுகாவலன் என பலவற்றை குறிக்கிறது. இதில், தங்கம் கிடைக்கும் இடம் ஒடுக்கப்பட்ட மக்களின் வசம் இருக்கிறது. இதை அபகரிக்க அதிகாரவர்க்கம் முயற்சி செய்கிறது. இதை ஒடுக்கப்பட்ட மக்கள் எப்படி சமாளித்தார்கள் என்பதுதான் தங்கலான் படத்தின் கதை. இப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.

Director Pa Ranjith shared thangalaan making video released chiyaan vikram birthday

நடிப்பின் அரக்கன்: இந்நிலையில், சீயான் விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு தங்கலான் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை இயக்குநர் பா ரஞ்சித் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் அடி, உதை, ரத்தம் என அட்டகாசமாக நடித்து இருக்கிறார் விக்ரம். மேலும், உங்கள் அபரிமிதமான திறமையை திரையில் காண ஆவலுடன் காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார். இந்த மேக்கிங் வீடியோவை பார்த்த ரசிகர்கள், விக்ரம் உண்மையிலே நடிப்பின் அரக்கன் என்பதை நிரூபித்து விட்டார் என்றும், இந்த படத்தில் அவருக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என்றும் கருத்துக்களை பகிர்ந்து, விக்ரமிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X