Pa.Ranjith - யாரும் அப்படி பார்ப்பதில்லை.. அலர்ட் ஆகுறாங்க.. சென்சார் போர்டை கிழித்து தொங்கவிட்ட பா.இரஞ்சித்

சென்னை: இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ப்ளூ ஸ்டார். கடந்த வியாழக்கிழமை வெளியான இந்தப் படத்தில் விக்ராந்த், அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், சாம் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படத்துக்கு ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களையே கொடுத்தனர். இந்தச் சூழலில் படத்தின் சக்சஸ் மீட் நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடந்தது.

தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றிய இயக்குநர் பா.இரஞ்சித். ஒடுக்கப்பட்டவர்களின் குரல் பெரிய அளவில் ஒலிக்காத தமிழ் சினிமாவில் இரஞ்சித் வந்த பிறகுதான் அந்தக் குரல் சத்தமாக கேட்க ஆரம்பித்தது. அவர் எடுக்கும் ஒவ்வொரு படமும் சமூகத்தில் ஏதோவொரு உரையாடலை தொடங்கிவைக்கும். அந்த அளவுக்கு அவரது படத்தின் கருப்பொருள் அமைந்திருக்கும் என்பது அவரது தனிச்சிறப்பு.

 Director Pa.Ranjith Slams Censor Board in Blue Star Success Meet

தங்கலான் இரஞ்சித்: பா.இரஞ்சித் கடைசியாக நட்சத்திரம் நகர்கிறது படத்தை இயக்கினார். அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக முகநூலில் வரும் கருத்துக்கள் பொல் நட்சத்திரம் நகர்கிறது படத்தை இரஞ்சித் இயக்கியிருக்கிறார் என கடும் விமர்சனம் எழுந்தது. அதனையடுத்து அவர் விக்ரமை வைத்து தங்கலான் படத்தை இயக்குவதற்கு கமிட்டானார். ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தில் பார்வதி, பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோரும் நடித்துவருகின்றனர்.

ஆஸ்கருக்கு செல்லும் இரஞ்சித்: பா.இரஞ்சித்தின் கனவுப் படமாக உருவாகும் இப்படத்தை ஆஸ்கருக்கு அனுப்பி வைக்கும் திட்டமும் படக்குழுவிடம் இருக்கிறது. படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றது. அதனைப் பார்த்த ரசிகர்கள் நிச்சயம் தங்கலான் படம் தமிழ் சினிமாவின் பெருமை மிகு அடையாளமாக இருக்கும் என மகிழ்ச்சி தெரிவித்துவருகின்றனர். படமானது விரைவில் வெளியாகவிருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படம் விக்ரமுக்கு மெகா ஹிட்டாக அமையும் என்றும் ரசிகர்கள் கருதுகின்றனர்.

தயாரிப்பாளர் இரஞ்சித்: பா.இரஞ்சித் இயக்குநராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் வலம் வருபவர். நீலம் புரொடக்‌ஷன்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனத்தை அவர் நடத்திவருகிறார். அந்த நிறுவனம் பரியேறும் பெருமாள், ரைட்டர், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு உள்ளிட்ட பல படங்களை தயாரித்திருக்கிறது. அதன் தயாரிப்பில் கடைசியாக ப்ளூ ஸ்டார் திரைப்படம் கடந்த ஜனவரி 25ஆம் தேதி வெளியானது.

நல்ல வரவேற்பு: இரஞ்சித் இயக்கும் படங்களுக்கு எப்படி நல்ல வரவேற்பு கிடைக்குமோ அதேதான் அவர் தயாரிக்கும் படத்துக்கும். அந்தவகையில் ப்ளூ ஸ்டார் படத்துக்கும் ரசிகர்கள் தங்களது அமோக வரவேற்பை கொடுத்திருக்கிறார்கள். சாந்தனு, அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படம் ஏற்றத்தாழ்வுகளை அடித்து நொறுக்க வேண்டும் என்ற வலுவான கருத்தை பேசியிருக்கிறது.

சக்சஸ் மீட்: இந்நிலையில் ப்ளூ ஸ்டார் படத்தின் சக்சஸ் மீட் நேற்று சென்னையில் நடந்தது. இதில் பேசிய இயக்குநரும், தயாரிப்பாளருமான பா.இரஞ்சித், "நீலம் புரொடக்‌ஷன் படம் சென்சாருக்கு செல்கிறது என்றாலே அந்தப் படத்தில் இதெல்லாம் இருக்கப்போகிறது என்று தணிக்கை குழு அலர்ட் ஆகிவிடுகிறார்கள். ப்ளூ ஸ்டார் திரைப்படம் வெளியாகக்கூடாது என்றெல்லாம் கருத்துக்கள் வெளியாக தொடங்கின. அதையெல்லாம் பார்த்து எனக்கு ஆச்சரியம்தான் ஏற்பட்டது.

என்னை அப்படி பார்ப்பதில்லை: என்னை பா.இரஞ்சித்தாக யாருமே பார்ப்பதில்லை. நான் பேசும் அரசியலைத்தான் உற்று கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். நான் பேசும் அரசியல்தான் என்னிடம் பலரை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது" என்றார். முன்னதாக இயக்குநர் மாரி செல்வராஜ் ஒரு பேட்டியில் பேசியபோதுகூட, 'கர்ணன் படத்தின் சில காட்சிகளை தூக்க வேண்டும் என சென்சார் போர்டு தன்னிடம் ரொம்பவே வாதாடியது. என்ன இந்த பெயர் எல்லாம் வருது' என்று கூறியதாக தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X