Pa.Ranjith: கபாலி வசனத்தை கெத்தாக பேசிய பா. ரஞ்சித்.. அட இது எப்போ நடந்துச்சு.. தீயாக பரவும் வீடியோ!

சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான தங்கலான் படம் வசூல் மற்றும் இல்லாமல் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. படத்தின் வசூல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியிலேயே நல்ல வசூல் செய்து, தயாரிப்பாளருக்கு மாபெரும் வெற்றியை ஈட்டித்தந்துள்ளது. படம் ரிலீஸ்க்கு முன்னர் படக்குழுவினர் படத்தின் புரோமோசனுக்காக ஊர் ஊராகச் சென்றதை விடவும், தற்போது படத்தின் வெற்றியைக் கொண்டாட ஊர் ஊராகச் சென்று கொண்டு உள்ளனர். இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற ரசிகர்கள் சந்திப்பில், இயக்குநர் பா. ரஞ்சித் கபாலி படத்தின் வசனத்தைப் பேசினார். பா. ரஞ்சித் கபாலி படத்தின் வசனத்தைப் பேசும்போது, விக்ரம் மிகவும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆன தமிழ் படங்களில் மாபெரும் பொருட்செலவில் உருவான படம் என்றால் அது தங்கலான் படம்தான். வரலாற்றில் நடந்த உண்மைச் சம்பவங்களை மாய எதார்த்த கதைக்களத்தில் சிறப்பாக உருவாக்கப்பட்ட படம்தான் தங்கலான். இந்தப் படத்தில் விக்ரம், பார்வதி, மாளாவிகா மோகனன், பசுபதி, ஹரி, அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏற்கனவே குறிப்பிட்டதைப் போலவே படம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆனது. அதன் பின்னர் ஹிந்தியில் ஆக்ஸ்ட் 30ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என கூறப்பட்டது. ஆனால் சில தினங்களுக்கு முன்னர் ஆகஸ்ட் 30ஆம் தேதி இல்லை எனவும், படம் செப்டம்பர் 6ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

pa ranjith thangalaan rajinikanth

படம் இதுவரை ரூபாய் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல் மூன்று நாட்களில் படம் ரூபாய் 53.64 கோடிகளை படம் வசூல் செய்ததாக படக்குழு தரப்பில் இருந்தே அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் குறித்த வசூல் விபரங்களை தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் சொல்லவில்லை. ஆனால் படம் கட்டாயம் ரூபாய் 100 கோடிகளைக் கடந்திருந்திருக்கும் என கூறப்படுகின்றது.

pa ranjith thangalaan rajinikanth

தங்கலான்: இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தங்கலான் படக்குழுவினர் மும்பையில் ரசிகர்களைச் சந்தித்து படம் குறித்து பேசினர். இந்த நிகழ்ச்சியில் தங்கலான் படத்தின் இயக்குநர் பா. ரஞ்சித், நடிகர் விக்ரம் மற்றும் நடிகை பார்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களில் கேள்விகளுக்கும் பதில் அளித்தனர். இந்நிலையில் ரசிகர் ஒருவர், இயக்குநர் பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் வெளியான கபாலி படத்தில் இடம் பெற்ற மிகவும் வரவேற்பைப் பெற்ற வசனத்தைப் பேசச் சொல்லிக் கேட்டார்.

கபாலி வசனம்: ரசிகரின் வேண்டுகோலை ஏற்ற இயக்குநர் பா. ரஞ்சித், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசிய வசனமான, "கபாலினா லுங்கி கட்டிகிட்டு, மரு வெச்சுக்கிட்டு டேய் கபாலி அப்படினு சொன்னா, சொல்லுங்க எஜமான் அப்படினு வந்து நிப்பானே அந்த கபாலினு நெனச்சயாடா, கபாலிடா" எனப் பேசினார். மேலும் கபாலிடா என பேசும்போது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு சொல்லிக் கொடுத்த உடல் மொழியையும் வெளிப்படுத்தினார்.

pa ranjith thangalaan rajinikanth

குஷியான விக்ரம்: இயக்குநர் பா. ரஞ்சித் இந்த வசனத்தைப் பேசும்போது ரசிகர்கள் மத்தியில் ஆரவாரம் இருந்தது. அதேநேரத்தில், நடிகர் விக்ரம் பா. ரஞ்சித் வசனத்தைப் பேசப் பேச துள்ளிக்குதித்தார். அதேபோல் நடிகை பார்வதி, பா. ரஞ்சித் வசனத்தைப் பேசியதும், தனது கால்களில் கையை வேகமாக தட்டி தனது குஷியை வெளிப்படுத்தினார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

pa ranjith thangalaan rajinikanth

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X