twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சமூக நீதி பேசுகிற படங்கள் உருவாக வேண்டும்.. திரைப்பட விழாவில் இயக்குநர் பா. ரஞ்சித் பேச்சு!

    |

    சென்னை: இயக்குனர் பா. ரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பாக வானம் கலைத்திருவிழா மற்றும் பி.கே ரோசி திரைப்பட விழாவை சென்னையில் இன்று துவங்கி வைத்தார்.

    முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்த தென்னிந்திய ஊடக மற்றும் பொழுதுபோக்கு மாநாடு ஏப்ரல் 9 மற்றும் 10 என இரு நாட்கள் சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், இயக்குநர் பா. ரஞ்சித் ஒருங்கிணைத்துள்ள இந்த திரைப்படவிழா ஏப்ரல் 9, 10,11ம் தேதிகளில் நடைபெறுகிறது.

    20 நாட்கள் ஒரே காஸ்ட்யூம்... நெல்சன் மட்டும்தான் காஸ்ட்யூம் மாத்துவாரு.. பூஜா கலகல! 20 நாட்கள் ஒரே காஸ்ட்யூம்... நெல்சன் மட்டும்தான் காஸ்ட்யூம் மாத்துவாரு.. பூஜா கலகல!

    பிகே ரோசி திரைப்பட விழா

    பிகே ரோசி திரைப்பட விழா

    இதன் துவக்கவிழா சென்னை வடபழனி பிரசாத் லேப் தியேட்டரில் துவங்கப்பட்டது , துவக்கவிழாவில் பேசிய பா. ரஞ்சித், இந்திய சினிமாவில் பல்லாயிரக் கணக்கான திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு பல ஆண்டுகளாக மக்களிடையே காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

    சினிமா படங்கள் மக்களில் கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்றன. சினிமாவில் பயன்படுத்தப்படும் மொழியும், வாழ்வியலும், ஆவணமாகின்றன.

    ரஞ்சித் பேச்சு

    ரஞ்சித் பேச்சு

    கலாச்சாரத்தையும், வாழ்வியலையும் அடுத்த தலைமுறைக்கு எளிதாக கொண்டுசெல்லும் வலிமை சினிமாவுக்கு உண்டு. அப்படிப்பட்ட சினிமா இங்கு என்னவாக இயங்கிக்கொண்டிருக்கிறது. பார்வையாளராக, படைப்பாளிகளாக நாம் அதை எவ்வாறு அணுகுகிறோம்.

    சமூகத்தில் பிரதிபலிப்பதுதான் சினிமாவிலும் பிரதிபலிக்கிறது. நாம் சினிமாவை எப்படி அணுகவேண்டியதாயிருக்கிறது.

    சமூக அக்கறையோடு

    சமூக அக்கறையோடு

    இப்படிப்பட்ட சூழலில் சமூக அக்கறையோடு, சமூக நீதி பேசுகிற படங்கள் இந்திய சினிமாவில் சமீபகாலங்களாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. அப்படி சமூக நீதியை பேசுகிற படங்களை ஒரு திரைப்படவிழாவில் திரையிடவேண்டும் என்கிற நோக்கில் இந்த முயற்சியை துவங்கியிருக்கிறோம். தொடர்ந்து சமூக நீதியை பேசுவோம் என்றார்.

    அனுமதி இலவசம்

    அனுமதி இலவசம்

    தலித் வரலாற்று மாத முதல் நிகழ்வாக பி.கே ரோசி பிலிம் பெஸ்டிவல் என்கிற பெயரில் துவங்குகிறது. இந்த பிலிம் பெஸ்டிவலுக்கு அனுமதி இலவசம். சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் நான்கு படங்கள் திரையிடப்படுகின்றன. தமிழ், இந்தி, மலையாளம், மராத்தி, தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழித்திரைப்படங்கள் திரையிடப்படவிருக்கின்றன.

    சமூக நீதி படங்கள்

    சமூக நீதி படங்கள்

    இயக்குநர் பா ரஞ்சித் இயக்கும் படங்களில் அடிதட்டு மக்களின் எழுச்சி குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும். அதே போல அவர் தயாரிக்கும் படங்களும் அதே போன்ற சமூக நீதி மற்றும் சமூக அக்கறை கொண்ட படங்களாகவே உள்ளன. நீலம் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய பா ரஞ்சித் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, ரைட்டர் மற்றும் ஜே பேபி உள்ளிட்ட வித்தியாசமான திரைக்கதைகளையும் திரைக் களத்தையும் பேசும் படங்களை தயாரித்துள்ளார்.

    English summary
    Director and Producer Pa Ranjith talks about How Social Content Movies gives impact in Cinema at PK Rossie film festival.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X