Thangalaan: விக்ரம் என்னை ஏன் இவ்வளவு நம்பினாருன்னே தெரியல.. உணர்ச்சிவசப்பட்ட பா ரஞ்சித்!
சென்னை: நடிகர் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 15ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டமாக வெளியானது தங்கலான். சுதந்திர போராட்ட காலகட்டத்தையொட்டி பீரியட் படமாக வெளியான இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை முன்னதாக ஏற்படுத்தியிருந்தது.
எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் படத்தின் கதைக்களம் அமைந்திருந்த நிலையில் படம் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. தொடர்ந்து வார இறுதி நாட்களில் வசூல் மழை பொழிந்த தங்கலான் படம் அடுத்தடுத்து வார நாட்களிலும் ரசிகர்களை திரையரங்குகளுக்கு வர செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் சக்சஸ் மீட் கொண்டாடப்பட்டது.

தங்கலான் படம்: நடிகர் விக்ரம், மாளவிகா மோகனன். பார்வதி. பசுபதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள தங்கலான் படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசாகி ஏராளமான ரசிகர்களை கட்டிப்போட்டு தொடர்ந்து வசூல் மழை பொழிந்து வருகிறது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் பா ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் ரிலீசான நிலையில் தற்போது அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துள்ளது. சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் கேஜிஎஃப் பகுதிகளில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கையை வெளிப்படுத்தும் வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் பீரியட் படங்களுக்கே உரிய பல்வேறு சவால்களை படம் எதிர் கொண்டது.
பா ரஞ்சித் நெகிழ்ச்சி: ஆனால் தன்னை சுற்றி பல திரை ஆளுமைகள் இருந்த நிலையில் அவர்களின் உதவியோடு தங்கலான் படத்தை தான் சாத்தியப்படுத்தியதாக இயக்குனர் பா ரஞ்சித் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடத்தப்பட்டுள்ளது. இதில் நடிகர் விக்ரம், உள்ளிட்ட படக்குழுவினரும் இயக்குனர் பா ரஞ்சித் உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய இயக்குநர் பா ரஞ்சித், இந்த படத்தை சாத்தியப்படுத்துவதற்கு தனக்கு உறுதுணையாக இருந்த ஒவ்வொருவரையும் குறிப்பிட்டு அவர்கள் எப்படி எல்லாம் தனக்கு துணையாக நின்றனர் என்பது குறித்து பேசினார்.
ஞானவேல் ராஜாவின் நம்பிக்கை: தொடர்ந்து இந்த படத்தை தயாரித்த ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா குறித்து தனியாக பாராட்டி பேசினார் பா ரஞ்சித். தங்களது கூட்டணி தன்னுடைய முதல் படமான அட்டகத்தி படத்திலிருந்து துவங்கியதாகவும் அட்டகத்தி படம் வெளியாவதில் பல்வேறு சிக்கல்களை சந்தித்த நிலையில், தன்மீது முழு நம்பிக்கை வைத்து அந்த படத்தை மிகச் சிறப்பான வகையில் ஞானவேல் ராஜா ரிலீஸ் செய்து தன்னுடைய திரை வாழ்க்கையை மிகவும் எளிதாக்கியதாகவும் இந்த படம் வெளியாகி கவனம் பெற்ற சூழலிலேயே அடுத்தடுத்த இரு படங்களில் தன்னை ஞானவேல் ராஜா கமிட் செய்ததாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
தங்கலான் சக்சஸ் மீட்: அதில் ஒன்று கார்த்தியின் மெட்ராஸ், மற்றொன்று விக்ரமின் தங்கலான். இதில் தங்கலான் படமும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியதாகவும் அதையெல்லாம் தாண்டி தன்னுடைய காதுப்படவே பலரும் தங்கலான் படம் குறித்து பல்வேறு விமர்சனங்களை ஞானவேல் ராஜாவிடம் வைத்ததாகவும் இந்த படம் ரிலீஸ் ஆவது பெரும் சிரமம் என்று கூறியதாகவும் ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி ஞானவேல் ராஜா இந்த படத்தை மிகவும் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்தது குறித்தும் பா ரஞ்சித் நெகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். மேலும் இன்றைய தினம் சக்சஸ் மீட்டுக்கு தான் கிளம்புவதற்கு முன்னதாக ஞானவேல் ராஜா தனக்கு கால் செய்து பேசியதாகவும் பா ரஞ்சித் குறிப்பிட்டார்.
மீண்டும் கூட்டணி: அடுத்த படத்தில் மிகவும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இணையலாம் என்றும் முன்னணி நடிகரை தான் அந்த படத்தில் கமிட் செய்ய உள்ளதாகவும் ஞானவேல் ராஜா தன்னிடம் கூறியதாகவும் பா ரஞ்சித் மேலும் தெரிவித்துள்ளார். யார் தன்மீது நம்பிக்கை வைக்கவில்லை என்றாலும் தனக்கு தன்மீது ஞானவேல் ராஜாவிற்கு எப்போதுமே நம்பிக்கை உண்டு என்றும் அதை காப்பாற்றும் முயற்சியில் தான் தொடர்ந்து ஈடுபட ஈடுபடுவேன் என்றும் பா ரஞ்சித் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேபோல தன்மீது மிகுந்த நம்பிக்கை வைத்து இந்தப் படத்திற்காக விக்ரம் உழைத்தது குறித்தும் பா ரஞ்சித் தன்னுடைய வியப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
தீனி போட்ட தங்கலான் படம்: தனக்கு மிகப்பெரிய அளவில் விக்ரம் உதவி செய்துள்ளதாகவும் அவருக்கு இந்தப் படம் சரியாக தீனி போட்டதாக அவர் நம்பியதாகவும் பா ரஞ்சித் மேலும் கூறியுள்ளார். இதுபோன்ற ஒரு நடிகரை தான் வேலை வாங்கியது தனக்கு மெய்சிலிர்ப்பை ஏற்படுத்தியதாகவும் பா ரஞ்சித் குறிப்பிட்டார். அதேபோல இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷ் மிகப்பெரிய ரோலை செய்துள்ளதாகவும் பா ரஞ்சித் பாராட்டு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











