கேஜிஎப் மாதிரி சியான் 61 இருக்காது.. விக்ரம் கெட்டப் குறித்து பா ரஞ்சித் சொல்லியிருக்கறத பாருங்க!

சென்னை : இயக்குநர் பா ரஞ்சித் தன்னுடைய வித்தியாசமான கதைக்களங்களால் ரசிகர்களால் கொண்டாடப்படும் இயக்குநர்களில் ஒருவராக உள்ளார்.

ஆர்யா நடிப்பில் இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படம் சிறப்பான வரவேற்பை பெற்றது.

இதனிடையே தற்போது விக்ரமை வைத்து கேஜிஎப் பின்னணியில் இவர் தனது அடுத்தப்படத்தை இயக்கவுள்ளார்.

இயக்குநர் பா ரஞ்சித்

இயக்குநர் பா ரஞ்சித்

இயக்குநர் பா ரஞ்சித் தன்னுடைய வித்தியாசமான கதைக்களங்களால் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருபவர். ரஜினியின் படங்களை இயக்கியவர். அதன்மூலம் மேலும் ரசிகர்களின் கவனத்தையும் பாராட்டுக்களையும் பெற்றவர். அடுத்தடுத்த படங்களில் வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபட்டு வருபவர்.

 சார்பட்டா பரம்பரை படம்

சார்பட்டா பரம்பரை படம்

தன்னுடைய படங்களில் சாதிய அடக்குமுறைகள் குறித்து பா ரஞ்சித் இழையோட விட்டிருப்பார். இத்தகைய கதைக்களங்களும் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து வருகிறது. இவரது சார்பட்டா பரம்பரை படம் கடந்த ஆண்டில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இரண்டு பரம்பரைகளுக்கு இடையிலான குத்துச் சண்டை குறித்து இந்தப் படத்தில் பேசியிருந்தார்.

சிறப்பான கேரக்டர்கள்

சிறப்பான கேரக்டர்கள்

இந்தப் படத்தில் ஆர்யா அந்த கேரக்டராகவே உருமாறியிருந்தார். ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டியிருந்தார். ஆர்யாவிற்குள் இருந்த கலைஞனை இந்தப் படத்தின்மூலம் வெளியில் கொண்டுவந்த பெருமையையும் பா ரஞ்சித் பெற்றார். இந்தப் படத்தில் ஒவ்வொரு கேரக்டரும் மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம்

நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம்


தனது தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்ஷன்ஸ் மூலம் தனது அசிஸ்டெண்ட் இயக்குநர்களுக்கும் வாய்ப்புக்களை கொடுத்து சில வெற்றிப்படங்களையும் கொடுத்துள்ள பா ரஞ்சித், தன்னுடைய அசிஸ்டெண்ட்கள் என்பதாலேயே அவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

அறிவு விவகாரத்தில் குரல்

அறிவு விவகாரத்தில் குரல்

இதேபோல தெருக்குரல் அறிவு எஞ்சாமி பாடலில் ஏன் புறக்கணிக்கப்படுகிறார் என்றும் கேள்வி எழுப்பி சமீபத்தில் ஏற்பட்ட சர்ச்சைகளுக்கு துவக்கப்புள்ளியாக அமைந்திருந்தார். இந்நிலையில் இவர் அடுத்ததாக விக்ரமுடன் இணைந்து அவரது 61வது படத்தை இயக்கவுள்ளார்.

சியான் 61 படம்

சியான் 61 படம்

இந்தப் படத்திற்கான பூஜைகள் மிகவும் பிரம்மாண்டமாக போடப்பட்ட நிலையில், இந்த மாத இறுதியில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் கேஜிஎப் பின்னணியில் உருவாக உள்ளதாக முன்னதாக படத்தின் பூஜையின்போது பா ரஞ்சித் தெரிவித்திருந்தார். இது பல கேள்விகளை எழுப்பியது.

முயற்சியை கைவிட்ட பா ரஞ்சித்

முயற்சியை கைவிட்ட பா ரஞ்சித்


இதனிடையே கபாலி படத்தை முடித்தவுடன் கேஜிஎப் படத்தை இயக்க தான் முடிவு செய்ததாகவும் ஆனால் பிரஷாந்த் நீல் என்பவர் கேஜிஎப் படத்தை இயக்கவுள்ளதாக கேள்விப்பட்டவுடன் அந்த முயற்சியை கைவிட்டதாகவும் ரஞ்சித் தெரிவித்துள்ளார். அதற்கேற்ப படத்தின் ட்ரெயிலரில் ஒருசில காட்சிகள் தன்னுடைய கருத்தை ஒத்திருந்ததாகவும் கூறியுள்ளார்.

 வித்தியாசமான கதைக்களம்

வித்தியாசமான கதைக்களம்

ஆனால் தற்போது வெளியாகியுள்ள கேஜிஎப் படங்களை பார்த்தவுடன் தான் நினைத்த கதைக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று தான் முடிவுக்கு வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அந்தப் படங்கள் கேங்ஸ்டர் படங்களாக வெளியாகியுள்ளதாகவும், கேஜிஎப் மக்களின் வாழ்க்கையை அந்தப் படங்கள் எந்தவகையிலும் கூறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 19வது நூற்றாண்டின் கதை

19வது நூற்றாண்டின் கதை

இந்தப் படம் 19வது நூற்றாண்டில் நடக்கும் கதையாக அமையவுள்ளதாகவும், சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் நடக்கும் நிகழ்வுகளையொட்டி படம் அமையும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். மேலும் படம் மிகவும் பிரம்மாண்டமாக பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மிரட்டலான விக்ரம் கெட்டப்

மிரட்டலான விக்ரம் கெட்டப்

படத்தில் விக்ரமின் கெட்டப் மிரட்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். கண்டிப்பாக ரசிகர்களை இந்தப் படம் கவரும் என்றும் கதைக்களம் மிகவும் அழுத்தமாக அமையும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அடுத்தாக விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் துருவ நட்சத்திரம் படத்தின் சூட்டிங்கில் விக்ரம் இணையவுள்ள நிலையில், இம்மாத இறுதியில் சியான் 61 படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X