Director Pa Ranjith: ரஜினி குறித்த கேள்வி.. நக்கலாக சிரித்த ரஞ்சித்.. கொதித்தெழுந்த ரசிகர்கள்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் பல ஆண்டுகளை கடந்து தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். தொடர்ந்து 70 ஆண்டுகளை கடந்த நிலையிலும் அவர் ஹீரோவாகவே நடித்து வருவது அனைத்து தரப்பினருக்கும் இளம் தலைமுறை நடிகர்களுக்கும் உத்வேகம் கொடுக்கும் வகையில் அமைந்து வருகிறது. அந்த வகையில் அவர் சூப்பர் ஸ்டார் என்றும் தலைவர் என்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.
ஆனாலும் இத்தனை ஆண்டுகால திரைப்பயணத்தில் அவர் பலரது மோசமான கமெண்ட்களையும் எதிர்மறை செய்கைகளையும் எதிர்கொண்டே தற்போதைய இந்த நிலைக்கு வந்துள்ளார். தொடர்ந்து பல எதிர்மறை கருத்துக்களை எதிர்கொண்டு வருகிறார். இந்நிலையில் ரஜினியுடன் இணைந்து இரு படங்களை கொடுத்துள்ள இயக்குநர் பா ரஞ்சித்தின் தற்போதைய இன்டர்வியூ மற்றும் நடவடிக்கை ரசிகர்களிடைடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நன்றி கெட்ட ரஞ்சித் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் பல ஆண்டுகளாக தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார்/ தமிழில் சூப்பர் ஸ்டார் ஆகவும் தலைவராகவும் கொண்டாடப்பட்டு வரும் ரஜினிகாந்த் 70 வயதை கடந்த நிலையில் தற்போதும் ஹீரோவாக நடித்து மாஸ் காட்டி வருகிறார். இவரது அடுத்தடுத்த படங்களில் சிறப்பான இயக்குனர்களுடன் இணைந்து நடித்து வரும் சூழலில் இந்தப் படங்கள் மிகப் பெரிய வசூலை குவித்து வருகின்றன. கடந்த ஆண்டில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. 600 கோடி ரூபாய்களை கடந்து இந்த படம் வசூலித்ததாக பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்தது.
ஜெயிலர் படத்தின் வெற்றி: தொடர்ந்து ஜெயிலர் வெற்றியை ரஜினிகாந்த், அனிருத், நெல்சன் திலீப்குமார் உள்ளிட்ட படக்குழுவினருடன் இணைந்து சன் பிக்சர்ஸ் கொண்டாடியது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான லால் சலாம் படம் சொதப்பியது. இந்த படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலிலேயே நடித்திருந்தாலும் அவரது மொய்தீன் பாய் என்ற கேரக்டர் ரசிகர்களை கவர்ந்தது. இருந்தபோதிலும் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. ரஜினிகாந்தை தொடர்ந்து சங்கி என்று பல்வேறு தரப்பினரும் கலாய்த்து வருகின்றனர். இதனிடையே லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டில் பேசிய அவரது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தன்னுடைய அப்பா சங்கி இல்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.
அப்பா சங்கி இல்லை: ஐஸ்வர்யா ரஜினியின் இந்த பேச்சு பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது. இந்நிலையில் பா ரஞ்சித்தின் இயக்கத்தில் கபாலி, காலா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் ரஜினிகாந்த். இந்த படங்கள் தலித் சமூகத்திற்கு ஆதரவாக அவர் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது பேட்டி ஒன்றில் பேசிய இயக்குநர் பா ரஞ்சித்திடம், ரஜினியின் இந்த படங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு இந்த படங்கள் தலித் சமூகத்திற்கு ஆதரவான படங்கள் என்று தெரியாமல் ரஜினி நடித்தாரா என்று கேள்வி எழுப்பப்பட்ட சூழலில் இதற்கு பா ரஞ்சித் நக்கலாக சிரிப்பதாக காணப்பட்டது.
பா ரஞ்சித்தின் ரியாக்ஷன்: அவரது இந்த செய்கை ரஜினி ரசிகர்களை கொதித்தெழ செய்துள்ளது. தற்போது லிட்டரில் நன்றி கெட்ட ரஞ்சித் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. தனக்கு வாழ்வு கொடுத்த நடிகர் ரஜினிகாந்திற்கு பா ரஞ்சித் நல்ல சன்மானம் கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இதனிடையே தான் என்னதான் நல்லது செய்தாலும் ரஜினிக்கு எப்போதுமே கெட்ட பெயர் தான் என்றும் அவரது முதுகில் குத்தியவர்கள் அதிகமானோர் உள்ளதாகவும் அந்த லிஸ்டில் தற்போது பா ரஞ்சித்தும் இணைந்துள்ளதாகவும் ரசிகர்கள் தொடர்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











