விஜய், அஜித், தனுஷ்.. தங்கர் பச்சான் மகன் விஜித்துக்கு பாண்டிராஜ், ஆரி சொன்ன பலே உதாரணங்கள்!

சென்னை: இயக்குநர் தங்கர்பச்சான் 'டக்கு முக்கு டிக்கு தாளம்' என்கிற டைட்டிலில் உருவாக உள்ள படத்தின் மூலம் தனது மகன் விஜித்தை சினிமாவுக்கு அறிமுகப்படுத்துகிறார்.

சமீபத்தில், நடந்த நடிகர் விஜித் அறிமுக விழாவில் இயக்குநர் வெற்றிமாறன், கஸ்தூரி ராஜா, இயக்குநர் பாண்டிராஜ் மற்றும் பிக் பாஸ் ஆரி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

விமர்சகர்கள் கண்டபடி விமர்சிப்பார்கள் அதையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டாம் விஜய் மற்றும் தனுசுக்கு வராத விமர்சனங்களா? என பிரபலங்கள் பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது.

தங்கர் பச்சான் மகன்

தங்கர் பச்சான் மகன்

மழைச்சாரல் எனும் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமான தங்கர் பச்சான், அஜித்தின் காதல் கோட்டை படத்தின் மூலம் பிரபலமானார். நடிகர் பார்த்திபனின் அழகி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி படத்தின் மூலம் ஹீரோவானார். இந்நிலையில், அவரது மகன் தற்போது டக்கு முக்கு டிக்கு தாளம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். சமீபத்தில், அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜித்தின் அறிமுகமும் சேர்ந்தே நடந்தது.

விஜய் + அஜித்

விஜய் + அஜித்

நடிகர் விஜய்யின் பெயரில் இருந்து 'வி' எழுத்தையும், அஜித் பெயரில் இருந்து 'ஜித்' எழுத்தையும் எடுத்து கோலிவுட்டில் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் கிங்காக தனது மகன் வர வேண்டும் என்கிற எதிர்கால கால்குலேஷனுடன் இயக்குநர் தங்கர் பச்சான் தனது மகனுக்கு விஜித் என பெயர் வைத்துள்ளார் என நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்களே மேடையில் கூறியது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

அஜித்துக்கு முன் விஜய் பெயர் ஏன்

அஜித்துக்கு முன் விஜய் பெயர் ஏன்

சமீபத்தில் கள்ளன் பட விழாவில் ப்ளூ சட்டை மாறனை ஆரி எச்சரித்தது பெரும் டிரெண்டான நிலையில், டக்கு முக்கு டிக்கு தாளம் இசை வெளியீட்டு விழாவிலும் ஆரி பங்கேற்று பேசினார். விஜித் எனும் பெயரில் விஜய் மற்றும் அஜித் இடம்பெற்றிருப்பதும் பச்சன் என அமிதாப் பச்சனின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது என தங்கர் பச்சான் மகனின் பெயர் குறித்து விளக்கம் அளித்த ஆரி, வி எனும் விஜய் பெயர் கொண்ட எழுத்து முதலில் இடம்பெற காரணம் தந்தையால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் என்பதை குறிப்பதாகவும், அஜித் பெயர் இரண்டாம் இருப்பது போல விஜித் தானே முயற்சித்து இதற்கு பிறகு சாதிக்க வேண்டும் என்று கூறினார்.

தனுஷையும் விமர்சித்தார்கள்

தனுஷையும் விமர்சித்தார்கள்

எதற்கும் துணிந்தவன் படத்தை இயக்கிய இயக்குநர் பாண்டிராஜ் பேசுகையில், தங்கர் பச்சான் தனது குரு என்றும், சிலுக்கு சட்டை போட்டு எப்படித்தான் நடிக்கிறாங்க என கலாய்த்த அவரே, தற்போது தனது மகனை சிலுக்கு சட்டை போட்டு கமர்ஷியலாக நடிக்க வைத்துள்ளார் என வஞ்ச புகழ்ச்சி அணியாக பாராட்டி விட்டு, பின்னர், நடிகர் தனுஷையும் ஆரம்பத்தில் முகம் சரியாக இல்லை, ஒல்லியாக இருக்கிறார் என விமர்சித்தார்கள், இப்போ அவரது நிலை எந்தளவுக்கு உயர்ந்திருக்கிறது, அதே போல விஜித்தும் விமர்சனங்களை கடந்து வெல்ல வேண்டும் என வாழ்த்தியிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X