சிவகார்த்திக்கேயனுக்கும் எனக்கும் என்ன பிரச்சினை..? இயக்குநர் பாண்டிராஜ் விளக்கம்
சிவகார்த்திக்கேயனுக்கும் தனக்கும் பிரச்சினை இல்லை என பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: நடிகர் சிவகார்த்திக்கேயனுக்கும், தனக்கும் இடையில் எந்தப் பிரச்சினையும் இல்லை என இயக்குநர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.
பசங்க, பசங்க 2 உள்ளிட்ட படங்களை இயக்கிய வெற்றிப்பட இயக்குநர் பாண்டிராஜ். இவர் சின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திக்கேயனை தனது மெரினா படம் மூலம் நடிகராக்கியவர்.தற்போது தமிழில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக சிவகார்த்திக்கேயன் இருந்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்திய படவிழாவில் இருவரும் சரிவர பேசிக் கொள்ளாததால், அவர்களிடையே பிரச்சினை என தகவல் பரவியது. அதாவது தனது புதிய படத்திற்காக பாண்டிராஜ், சிவகார்த்திக்கேயனை அணுகியதாகவும், ஆனால் அவர் அதிக சம்பளம் கேட்டதாகவும், இதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு எனவும் கூறப்பட்டது.
ஆனால், இந்தத் தகவலை மறுத்துள்ளார் பாண்டிராஜ். 'எனக்கும், சிவகார்த்திக்கேயனுக்கும் இடையே எந்தவித பிரச்சினையும் இல்லை. விழா தொடங்குவதற்கு முன்னதாக இருவரும் ஏறக்குறைய அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். விழா மேடையில் பரபரப்பில் நடந்த கவனக்குறைவை பெரிய விசயமாக்கி, எனக்கும் சிவகார்த்திக்கேயனுக்கும் பிரச்சினை என தவறான தகவல் பரவி விட்டது' என அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











