கடைக்குட்டி சிங்கம் மாதிரி சூப்பரா இருக்கும்... அதுக்கு நான் கியாரண்டி... பாண்டிராஜ் அப்டேட்
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் சூர்யாவின் 40வது படத்தை தற்போது இயக்கி வருகிறார்.
சூர்யா தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் வாடிவாசல் மற்றும் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா40 படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் பல்வேறு படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ள அவர், கௌதம் மேனனின் நவரசா வெப் சீரிசிலும் நடித்து வருகிறார்.

அடுத்தடுத்த படங்கள்
நடிகர் சூர்யா தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா 40 படங்களில் நடித்து வருகிறார். மேலும் பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ள அவர், கௌதம் மேனனின் நவரசா வெப் சீரீசிலும் அவர் நடித்து வருகிறார்.

பிரியங்கா அருள் மோகன் நாயகி
இதனிடையே சூர்யா 40 படத்தில் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் நடித்துள்ள பிரியங்கா அருள் மோகன் நாயகியாக இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் போஸ்டரில் சூர்யா கையில் வாளுடன் முன்னே நடந்து போகும்படியாக இருந்தது.

சூர்யா 40 குறித்த அப்டேட்
இந்நிலையில் நேற்றைய தினம் நடிகர் கார்த்தியின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்த டைரக்டர் பாண்டிராஜ், நடிகர் சூர்யாவின் 40வது படம் குறித்த அப்டேட்டையும் வெளிப்படுத்தியுள்ளார். கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் எவ்வாறு அவரது ரசிகர்களுக்கு சிறப்பான படமாக அமைந்ததோ அதேபோல இந்த படமும் சூர்யா ரசிகர்களுக்கு அமையும் என்று தெரிவித்துள்ளார்.
Recommended Video

சிறப்பான படம்
மேலும் படத்தின் டைட்டில் முதல் ஒவ்வொரு லுக்கையும் மிகவும் கவனமாக அமைத்து வருவதாகவும் இதன்மூலம் சூர்யா ரசிகர்களுக்கு சிறப்பான படத்தை கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சமீப காலங்களில் சூர்யா கிராமத்து கெட்டப்பில் அதிரடி காட்டிவரும் நிலையில், இந்த படமும் அதே போன்றதொரு வித்தியாசமான சூர்யாவை ரசிகர்களுக்கு அடையாளம் காட்டும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











