கலாநிதி மாறன் முன்னாடியே சொன்னாரு... பாண்டிராஜ் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

சென்னை : நடிகர் சூர்யா, பிரியங்கா மோகன், சூரி, சத்யராஜ், வினய் உள்ளிட்டவர்கள் நடிப்பில் நேற்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது எதற்கும் துணிந்தவன்.

இந்தப் படம் சிறப்பான வசூலை முதல் நாளிலேயே பெற்றுள்ளது.

இந்நிலையில் படம் குறித்து இயக்குநர் பாண்டிராஜ் வீடியோ மூலம் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

எதற்கும் துணிந்தவன் படம்

எதற்கும் துணிந்தவன் படம்

நடிகர் சூர்யா, பிரியங்கா மோகன், சூரி, சத்யராஜ், வினய், சரண்யா பொன்வண்ணன், புகழ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் நேற்றை தினம் எதற்கும் துணிந்தவன் படம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. இந்தப் படம் தற்போது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

திரையரங்கில் சூர்யா படம்

திரையரங்கில் சூர்யா படம்

திரையிடப்பட்ட அனைத்து இடங்களிலும் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு படம் உள்ளாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் பெண்களுக்கு எதிரான விஷயத்தை பேசியுள்ளது. 3 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யாவின் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசான நிலையில் இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ரசிகர்கள் ஏமாற்றம்

ரசிகர்கள் ஏமாற்றம்

இடையில் சூரரைப் போற்று, ஜெய்பீம் என கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து சூர்யா நடித்திருந்தார். ஆனால் இந்த இரு படங்களும் திரையரங்குகளில் இல்லாமல் நேரடியாக ஓடிடியில் ரிலீசாகியிருந்தது. இந்த இரு படங்களும் ரசிகர்களை கவர்ந்த நிலையிலும் திரையரங்குகளில் ரிலீசாகாமல் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.

கமர்ஷியல் பக்கம் திரும்பிய சூர்யா

கமர்ஷியல் பக்கம் திரும்பிய சூர்யா

இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் படம் மூலம் மீண்டும் கமர்ஷியல் பக்கம் திரும்பியுள்ளார் சூர்யா. படம் துவங்குவதற்கு முன்பு அவரின் மாஷ் அப் ஒன்றும் திரையிடப்பட்டு வருகிறது. இதுகுறித்து படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் மிஸ் பண்ணிடாதீங்க என்று ட்வீட் செய்துள்ளார்.

பாண்டிராஜ் வீடியோ

பாண்டிராஜ் வீடியோ

மேலும் படம் குறித்து அவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தனது படத்தை இரண்டாவது முறையாக தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ்க்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் படத்தின் கதையை கலாநிதி மாறனுக்கு சொன்ன போது அவர் கண்டிப்பாக இந்தப் படம் சூப்பர் ஹிட்டாகும் என்று கணித்ததையும் அவர் கூறியுள்ளார்.

கொண்டாட்டமான படம்

கொண்டாட்டமான படம்

அனைவரும் கொண்டாடும்வகையில் படம் அமைந்துள்ளதாகவும் விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாமல் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். படத்தை பார்த்தவர்கள் அனைவரும் பாசிட்டிவ் கமெண்ட் அளித்து வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் மேலும் இந்தப் படத்தை அனைவரும் திரையரங்குகளில் சென்று பார்க்கவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X