முந்தைய படங்கள்ல இருந்து ஆக்ஷன் அதிகமா இருக்கும்... சூர்யா படம் குறித்து டைரக்டர் உற்சாகம்

சென்னை : நடிகர் சூர்யா, பிரியங்கா அருள் மோகன் நடிப்பில் உருவாகியுள்ள படம் எதற்கும் துணிந்தவன்.

இந்தப்படம் வரும் பிப்ரவரி மாதம் மத்தியில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தப் படம் குறித்து படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

எதற்கும் துணிந்தவன் படம்

எதற்கும் துணிந்தவன் படம்

நடிகர் சூர்யா, பிரியங்கா அருள் மோகன் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து அடுத்த மாதத்தில் வெளியாக உள்ள படம் எதற்கும் துணிந்தவன். சூர்யாவின் 40வது படமான இந்தப் படத்தில் கிராமத்து கெட்டப்பில் சூர்யா காணப்படுகிறார்.

திரையரங்குகளில் ரிலீஸ்

திரையரங்குகளில் ரிலீஸ்

சூரரை போற்று, ஜெய் பீம் படங்களின் அடுத்தடுத்த வெற்றியை அடுத்து தற்போது எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யா நடித்துள்ளார். கடந்த இரண்டு படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியான நிலையில், தற்போது எதற்கும் துணிந்தவன் படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

மாஸ் மசாலா ட்ரீட்

மாஸ் மசாலா ட்ரீட்

படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றன. இந்நிலையில் இந்தப் படம் குறித்து தன் கருத்துக்களை பகிர்ந்துள்ள பாண்டிராஜ், இந்தப் படம் மாஸ் மசாலா விரும்பிகளுக்கு மிகச்சிறந்த ட்ரீட்டாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

தூக்கலான ஹீரோயிசம்

தூக்கலான ஹீரோயிசம்

தன்னுடைய முந்தைய படங்களில் இருந்து இந்தப் படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக காணப்படும் என்றும் சூர்யாவிற்கு படத்தில் ஹீரோயிசம் சற்று தூக்கலாக காணப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். தனியார் செய்தி ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இமான் இசை

இமான் இசை

படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் ரிலீசாக உள்ளது. முன்னதாக பிப்ரவரி 4ம் தேதி படம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பிப்ரவரி மத்தியில் படம் ரிலீசாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிலீஸ் தள்ளி வைப்பு

ரிலீஸ் தள்ளி வைப்பு

பிப்ரவரி 17ம் தேதி படம் திரையரங்குகளில் ரிலீசாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ரிலீசுக்காக காத்திருந்த ரசிகர்கள் தற்போது ரிலீஸ் தேதி தள்ளிப் போயுள்ளதால் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Recommended Video

2021-ல் அதிகம் பேசப்பட்ட Suriya, Vijay, Ajith | Jaibhim, Thala Ajith, Rolls Royce
ரசிகர்கள் குஷி

ரசிகர்கள் குஷி

இந்நிலையில் படம் குறித்து டைரக்டர் பாண்டிராஜ் பேசியுள்ளது அவர்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது. படத்தின் ரிலீஸ் மேலும் இரண்டு வாரங்களுக்கு தள்ளிப் போயுள்ள நிலையில், படத்தின் 3 பாடல்கள் இதுவரை வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X