பரோட்டா சூரி எல்லாரையும் ஏமாத்துறாரு என்றார் இயக்குநர் பாண்டிராஜ்... கார்த்தி கூறிய சுவாரசிய தகவல்!!

சென்னை: நடிகர் சூர்யா தயாரிப்பில் அவருடைய தம்பியும் நடிகருமான கார்த்தி நடித்திருக்கும் விருமன் திரைப்படத்தின் பிரமோஷன் படுஜோராக நடந்து கொண்டிருக்கிறது.

Recommended Video

கோயில் ஆட்டத்தில் பங்குபெற்ற சூரி; வைரலாகும் வீடியோ

இந்தப் படத்தின் முக்கிய அட்ராக்ஷனாக கருதப்படுவது கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கும் இயக்குநர் சங்கரின் மகள் அதிதி தான்.

விருமன் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சூரியை பற்றி நகைச்சுவையான செய்தி ஒன்றை கூறியிருக்கிறார் நடிகர் கார்த்தி.

சூரி

சூரி

அனைத்து நடிகர்களைப் போலவே நடிகர் சூரியும் கடினப்பட்டு தான் இப்போதுள்ள உயரத்தை எட்டியுள்ளார். காதல் திரைப்படத்தில் அவர் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது கூட அவர் பிரபலமான பின்பு தான் அதிகமாக பேசப்பட்டது.

பொன்ராம் சிவ கார்த்திகேயன் கூட்டணி

பொன்ராம் சிவ கார்த்திகேயன் கூட்டணி

சூரியின் காமெடி அதிகமாக ஒர்க் அவுட் ஆகியது என்றால் அது இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருந்த படங்களில்தான் என்றே சொல்லலாம். நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி நடித்துள்ள அனைத்து காட்சிகளிலும் சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது. இவர்களது நகைச்சுவைக்காகவே ஓடிய திரைப்படம்தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.

சிக்ஸ் பேக் சூரி

சிக்ஸ் பேக் சூரி

இப்படி நகைச்சுவை காட்சிகளில் நடித்துக் கொண்டிருந்தவர் திடீரென்று சீம ராஜா திரைப்படத்தில் சிக்ஸ் பேக்ஸ் உடன் தோன்றினார். அவருடைய மாற்றம் அதோடு நிற்கவில்லை தற்சமயம் இயக்குநர்களில் முதன்மையாக கருதப்படும் வெற்றிமாறன் இயக்கிக் கொண்டிருக்கும் விடுதலை திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார் சூரி. இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது.

பாண்டிராஜ் கிண்டல்

பாண்டிராஜ் கிண்டல்

அண்ணாத்த திரைப்படத்தின் ப்ரோமோஷனில்தான், தான் ஒரு இரட்டையர் என்றும் தனக்கு லட்சுமணன் என்ற தம்பி இருப்பதாகவும் சூரி கூறி இருந்தார். இந்நிலையில் விருமன் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில், கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குநர் பாண்டி ராஜ் சூரியை பற்றி ஒரு விஷயத்தை, பத்திரிக்கையாளர்களிடம் கூறினார். "சூரி நம்முடைய வயதை சேர்ந்தவர் அல்ல. நம்முடைய அப்பாக்கள் காலகட்டத்தைச் சேர்ந்தவர். ஆனால் தோற்றத்தை இளமையாக வைத்துக் கொண்டு ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என்று பாண்டிராஜ் கூறுவாராம். அவர் கூறிய அந்தத் தகவலின் உண்மைதனத்தை விருமன் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போதுதான் கார்த்தி உணர்ந்தாராம். சூரியின் ஊர் அருகே படப்பிடிப்பு நடந்தபோது அவர் நடத்தும் ஹோட்டல்களில் பலமுறை விருந்து வைத்துள்ளாராம் சூரி. அவருடைய தம்பி லட்சுமணன்தான் கார்த்திக்கு உணவை எடுத்துக் கொண்டு வருவாராம். லக்ஷ்மணனை பார்க்கும் போது தான் சூரிக்கு எவ்வளவு வயது இருக்கும் என்று தான் உணர்ந்ததாக கார்த்தி வேடிக்கையாக கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X