எதிர்க்கும் துணிந்தவன் பிளாப் இல்ல.. கங்குவா, ரெட்ரோ படத்தை விட நல்ல வசூல் தான். பாண்டிராஜ்!

சென்னை: விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த காதல் நகைச்சுவை படமான 'தலைவன் தலைவி' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி கரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வெளியான 51வது திரைப்படமான இப்படத்தில், யோகி பாபு, தீபா, செம்பன் வினோத், ரோஷினி ஹரிப்ரியன், சரவணன், மைனா நந்தினி, காளி வெங்கட், ஆர்.கே. சுரேஷ், வினோத் சாகர், அருள்தாஸ், ஜானகி சுரேஷ், சென்றாயன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் குறித்து பேசிய படத்தின் இயக்குநர் பாண்டிராஜ்,

படத்தை பார்த்த விவாகரத்து பெற்று பிரிந்த ஒரு தம்பதியினர். படம் பார்த்த பிறகு நானும் என் கணவரும் சேர்ந்து விட்டோம் என்று சொல்லி இருக்கிறார். இதற்கு மேல் எனக்கு வேறு என்ன பாராட்டு வேணும். படம் பார்த்த ஒவ்வொருவரும், படத்தை பாராட்டி வருகிறார்கள். அதுவும் குடும்பத்தோடு பார்க்க சொல்கிறார்கள். விஜய் சேதுபதி, ஃபோன் செய்து இப்படி ஒரு படத்தை எனக்கு கொடுத்ததற்கு ரொம்ப நன்றி என்றார். நானும், எனக்கு நீங்க கால்ஷீட் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி என்று சொன்னேன் என்றார்.

Thalaivan Thalaivii Vijaysethupathi Pandiraj
Photo Credit:

கடுமையாக உழைத்தோம்: தொடர்ந்து பேசிய பலர், அண்ணன் சூர்யாவிற்கு பிளாக் கொடுத்துவிட்டு மற்ற நடிகர்களின் படங்களுக்கும் ஹிட் கொடுத்து விட்டீர்களே என பலரும் இணையத்தில் கமெண்ட் செய்கிறார்கள். இப்படி எல்லாம் இல்லை, சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்திற்கு தான், மூன்று ஆண்டுகளாக கடுமையாக வேலை பார்த்தோம். ஏனென்றால், அந்த படம் எடுக்கும்போது கொரோனா, அதையும் கருத்தில் எடுத்துக்கொள்ளாமல், படத்திற்காக கடுமையாக வேலை பார்த்தோம். அது அமைவதில் நம்ம கையில் இல்லை.

பிளாப் இல்லை: சூர்யாவிற்கு குறைவாக வேலை பார்க்க வேண்டும், கார்த்திக்கு அதிகமாக வேலை பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் இல்லை. கடைக்குட்டி சிங்கத்தை விட எதற்கும் துணிந்தவன் படம் தான் நம்பிக்கை கூறிய திரைப்படமாக இருந்தது. அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என கடுமையாக. ஆனால் அந்தப் படம் ஏதோ ஒரு வகையில் வெற்றி பெறாமல் போய்விட்டது அதை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். ஆனால் அதற்காக அந்த படத்திற்கு உழைக்கவில்லை என்று எல்லாம் சொல்லி விட முடியாது. உயிரைக் கூட மதிக்காமல் அந்த படத்திற்காக கடமையாக உழைத்தோம். ஆனால், தயாரிப்பாளர்களை பொருத்தவரை அந்த படம் வெற்றி படமாக தான். ஆனால், வசூல் ரீதியாக அந்த படம் வெற்றி பெறவில்லை. எதற்கு பின் சூர்யா நடித்த கங்குவா, ரெட்ரோ படத்தை விட எதர்க்கும் துணிந்தவன் நல்ல வசூலை பெற்றது. ஆனால், கடைக்குட்டி சிங்கம் படத்தின் வசூலை அந்த படம் தொடவில்லை என்பது தான் உண்மை என பாண்டிராஜ் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X