»   »  டி.ஆரும், சிம்புவும்தான் குத்துப் பாட்டு கேட்டு ஒத்தக்காலில் நிற்கிறார்கள்.. பாண்டிராஜ்

டி.ஆரும், சிம்புவும்தான் குத்துப் பாட்டு கேட்டு ஒத்தக்காலில் நிற்கிறார்கள்.. பாண்டிராஜ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இது நம்ம ஆளு படத்தை எந்த நேரத்தில் ஆரம்பித்தனரோ தற்போது வாலு படத்தை விடவும் பூதாகரமாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறன படம் வெளியீடு தொடர்பான பிரச்சினைகள்.

இது நம்ம ஆளு திரைப்படத்திற்கு நயன்தாரா கால்ஷீட் அளிக்க மறுக்கிறார் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார் டி.ராஜேந்தர்.


ஆனால் நயன்தாரா மீது எந்தத் தவறும் இல்லை, பிரச்சினை சிம்பு மீதும் டி.ராஜேந்தர் மீதும் தான் என்று தற்போது கூறியிருக்கிறார் படத்தின் இயக்குனரான பாண்டிராஜ்.


உண்மையில் இந்தப் பிரச்சினையில் நடந்தது என்ன என்று இயக்குநர் பாண்டிராஜ் விளக்கம் அளித்திருக்கிறார், அது என்ன என்பதை பார்க்கலாம்.


நயன் மீது புகார் கொடுத்த டி.ராஜேந்தர்

நயன் மீது புகார் கொடுத்த டி.ராஜேந்தர்

இது நம்ம ஆளு படத்தின் தாமதம் காரணமாக நயன்தாரா தேதி தர மறுக்கிறார் எனவும். 25 சதவீத பணம் மட்டுமே பாக்கி, பாடல்களை முடித்துக் கொடுத்த பின்னர் மீதி பணத்தை கொடுப்போம் நயன்தாரா படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் படத்தின் தயாரிப்பாளர் டி.ராஜேந்தர் புகார் கொடுத்திருக்கிறார்.


படம் எப்பவோ முடிஞ்சிருச்சு பாஸ்

படம் எப்பவோ முடிஞ்சிருச்சு பாஸ்

இந்நிலையில் இது குறித்து படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் கூறுகையில்" உண்மை நிலவரப்படி படம் முடிந்துவிட்டது. அடுத்த வாரம் கூட ரிலீஸ் செய்யலாம்.


குத்துப் பாடலால் தாமதம்

குத்துப் பாடலால் தாமதம்

ஆனால் சிம்புவும், டி.ராஜேந்தரும் தான் குத்து பாடல்கள் வேண்டும் என கேட்கின்றனர். மேலும் அந்தப் பாடலில் டி.ராஜேந்தர், சிம்பு, குரளரசன் மற்றும் நயன்தாரா இடம்பெறும்படியும், மேலும் அம்மாடி ஆத்தாடி பாணியிலான பாடலுமாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளனராம். படத்தின் கதைப்படி அப்படி ஒரு பாட்டே தேவையில்லை.


தயாரிப்பாளர்களின் இயக்குநர்

தயாரிப்பாளர்களின் இயக்குநர்

எனினும் தயாரிப்பாளர்களின் இயக்குநரான நான் மார்க்கெட்டிங், புரமோஷன் கருதி இப்படி ஒரு பாடல் கேட்கும் போது அவர்கள் விருப்பப்படியும், எனது ஸ்டைலிலும் ஒரு பாடல் கொடுக்க நான் ரெடியாக இருக்கிறேன்.


நயனின் கால்ஷீட்டை வீணடித்த சிம்பு, டி.ராஜேந்தர்

நயனின் கால்ஷீட்டை வீணடித்த சிம்பு, டி.ராஜேந்தர்

எனினும் நயன்தாரா இந்தப் பாடலுக்காக 8 முறை கால்ஷீட் கொடுத்து விட்டார். அதில் இரண்டு முறை பாடல் ரெடியாகவில்லை எனவும், வேறு சில காரணங்களாலும் தேதிகளை அவர்களை வீணடித்துவிட்டார்கள்.


பணம் கூட வேண்டாம்

பணம் கூட வேண்டாம்

மேலும் நயன்தாரா பணம் கூட வேண்டாம் கதையில் எனக்கு அதீத நம்பிக்கை இருக்கிறது, படம் நல்ல முறையில் வெளியானால் போதுமென கூறியுள்ளார்.


25 நாட்களில் நடித்த நயன்

25 நாட்களில் நடித்த நயன்

25 நாட்களில் அவர் நடிக்க வேண்டிய காட்சிகளை சரியாக நடித்து கொடுத்துள்ளார். நயன்தாராவும் இது குறித்து நடிகர் சங்கத்தில் தகவல் கொடுத்துவிட்டார் " என்று டி.ராஜேந்தரின் புகாருக்கு தற்போது விளக்கம் அளித்திருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.


English summary
Idhu Namma Aalu Movie Issue: Nayanthara Hasn't Asked Money Says Director Pandiraj.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil