சூர்யாவுக்கு துரோகம் செஞ்சிட்டாரா பாண்டிராஜ்.. ஆத்திரமடைந்த அன்பான ஃபேன்ஸ்.. என்ன ஆச்சு?

சென்னை: தலைவன் தலைவி படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கும் இயக்குநர் பாண்டிராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தான் அதிக வசூல் என்றும் ஹீரோவும் தயாரிப்பாளரும் செம ஹேப்பி என பேசியுள்ளார். அவரது பேச்சு சூர்யா ரசிகர்களை ரொம்பவே அப்செட் ஆக்கியிருக்கிறது.

பசங்க படத்தின் மூலம் இயக்குநராக சினிமாவில் அறிமுகமான பாண்டிராஜ் கார்த்தியை வைத்து எடுத்த கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தம்பிக்கு வெற்றிக் கொடுத்த இயக்குநர்களுடன் தொடர்ந்து சூர்யா பயணித்து பல்பு வாங்கி வருவதை போலவே எதற்கும் துணிந்தவன் திரைப்படமும் அவருக்கு ஆகிவிட்டது என ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்த நிலையில், படம் வெற்றி தான் என பாண்டிராஜ் கூறியுள்ளார்.

Director Pandiraj says Suriya s last theaterical hit was Etharkkum Thuninthavan upsets fans
Photo Credit:

அதுமட்டுமின்றி அவர் சொன்ன இன்னொரு விஷயம் தான் தற்போது பாண்டிராஜ் சூர்யாவுக்கு துரோகம் செய்துவிட்டார் என அன்பான ரசிகர்கள் ஆத்திரமடைய காரணமாக அமைந்துள்ளது.

தலைவன் தலைவி தாறுமாறு வெற்றி: இந்த ஆண்டு வெளியான 250க்கும் மேற்பட்ட படங்களில் விஜய் சேதுபதியின் ஏஸ் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட படங்கள் பாக்ஸ் ஆபீஸில் படுதோல்வியையே சந்தித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சுமார் 10 படங்கள் மட்டுமே பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்திருக்கும் என்கின்றனர். அந்த லிஸ்ட்டில் தற்போது தலைவன் தலைவி திரைப்படமும் இணைந்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டிலேயே 30 கோடி வசூலை அந்த படம் கடந்துள்ளது என்கின்றனர். இந்த வாரமும் படம் கல்லா கட்டும் என்றும் 50 கோடி வசூலை தாண்டும் என்றும் கூறுகின்றனர்.

எதற்கும் துணிந்தவன் படத்துக்குத்தான் கடுமையான உழைப்பு: கடைக்குட்டி சிங்கம் படத்தை விட எதற்கும் துணிந்தவன் படத்திற்காகத்தான் கடுமையான உழைப்பை போட்டேன். கொரோனா காலத்தில் உயிரை கூட துச்சமாக நினைத்து படத்துக்காக ஏகப்பட்ட வேலைகளை நானும் என்னுடைய டீமும் பார்த்தோம். ஆனால், படம் நம்பர்ஸாக பெரிய வெற்றியை பெறவில்லை என சமீபத்தில் அளித்த பேட்டியில் பாண்டிராஜ் கூறியுள்ளார்.

Director Pandiraj says Suriya s last theaterical hit was Etharkkum Thuninthavan upsets fans
Photo Credit:

கங்குவா, ரெட்ரோவை விட: சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பெரிய நம்பர்ஸ் எடுக்கவில்லை என்றாலும், தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படவில்லை. அந்த நிறுவனம் செம ஹேப்பி தான் எனக்கூறிய பாண்டிராஜ், அந்த படத்திற்கு பிறகு வெளியான சூர்யாவின் படங்கள் அதை விட அதிக வசூலை இன்னமும் குவிக்கவில்லை என பாண்டிராஜ் சொல்லியிருப்பது தான் ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது. கங்குவா மற்றும் ரெட்ரோ படங்கள் எதற்கும் துணிந்தவன் படம் திரையரங்குகளில் செய்த வசூலைக் கூட செய்யவில்லை என்பதைத்தான் அவர் சொல்லியிருக்கிறார் என சோஷியல் மீடியாவில் சூர்யாவின் மார்க்கெட் குறைந்து விட்டதாக ரசிகர்கள் சண்டையே ஆரம்பித்துள்ளது.

ஆர்ஜே பாலாஜி என்ன பண்ணப்போறாரோ?: கார்த்தியை வைத்து பையா படத்தை எடுத்த லிங்குசாமியுடன் சூர்யா இணைந்து நடித்த அஞ்சான் படம் ஃபிளாப் ஆனது. சிறுத்தை படத்தை இயக்கிய சிவாவுடன் இணைந்து சூர்யா நடித்த கங்குவா படமும் கண்டம் ஆனது. கடைக்குட்டி சிங்கம் படத்தை இயக்கிய பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படமும் பெரிதாக வெற்றி பெறவில்லை. அதே போல ஒவ்வொரு இயக்குநர்களும் சூர்யாவுக்கு துரோகம் செய்து வருகின்றனர். அடுத்ததாக கருப்பு படத்தின் ரிலீசுக்குப் பிறகு ஆர்ஜே பாலாஜி என்ன சொல்ல காத்திருக்கிறாரோ என ரசிகர்கள் இப்போதே ஃபீல் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X