முதலமைச்சராக நடிக்கிறாரா சூர்யா? வதந்திகளை நம்ப வேண்டாம் என அதிரடியாக ட்வீட் போட்ட இயக்குநர்!
சென்னை: நடிகர் சூர்யா முதலமைச்சராக நடிக்கப் போகிறார் என பரவிய தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் இயக்குநர் பாண்டிராஜ்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள சூர்யா 40 திரைப்படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
டாக்டர் படத்தின் நாயகி பிரியங்கா மோகன் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என்கிற அறிவிப்பு நேற்று வெளியாகி வைரலானது.

தொடர்ந்து அப்டேட்கள்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள சூர்யாவின் 40வது திரைப்படம் தொடர்பான அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இசையமைப்பாளர் டி இமானின் பிறந்தநாளை முன்னிட்டு சூர்யா 40 படத்திற்கு அவர் தான் இசையமைப்பாளர் என்கிற அறிவிப்பு வெளியானது.

பிரியங்கா மோகன்
இந்நிலையில், நேற்று, சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகவுள்ள டோலிவுட் நடிகை பிரியங்கா மோகன் தான் சூர்யா 40வது படத்தில் அவருக்கு ஜோடி என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

முதலமைச்சர் சூர்யா
மேலும், இயக்குநர் பாண்டிராஜ் இயக்கவுள்ள 'சூர்யா 40' படத்தில் நடிகர் சூர்யா 5 கெட்டப்பில் நடிக்க உள்ளதாகவும், முதலமைச்சராகவும் ஒரு ரோலில் நடிக்கப் போகிறார் என்கிற தகவலும் நேற்று முதல் சமூக வலைதளத்தில் பரவிய தகவல் வதந்தி என தற்போது இயக்குநர் பாண்டிராஜ் அதிரடியாக ட்வீட் போட்டுள்ளார்.

வதந்திகளை நம்பவேண்டாம்
அந்த வதந்தி சில ஊடகங்களில் செய்தியாகவும் வெளியான நிலையில், வதந்திகளை நம்பவேண்டாம் என இயக்குநர் பாண்டிராஜ் ஸ்க்ரீன் ஷாட்டுடன் போட்ட ட்வீட் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சூர்யா 40 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியானால் தான் படத்தின் கதை எப்படி இருக்கும் என்றே யூகிக்க முடியும்.

ஏற்கனவே சிஎம்
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி நடிப்பில் வெளியான என்ஜிகே திரைப்படத்திலேயே நடிகர் சூர்யா சிஎம் ஆக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், சூர்யாவின் 40வது படம் அரசியல் படமாக இருக்குமா? இல்லை கடைக்குட்டி சிங்கம் போல கிராமத்து படமாக இருக்குமா? என்பதை காண காத்திருப்போம்.


Click it and Unblock the Notifications











