சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் சூட்டிங் முடிந்தது... பாண்டிராஜ் மகிழ்ச்சி அண்ணாச்சி!
சென்னை : நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
Recommended Video
இந்நிலையில் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளதாக இயக்குநர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.
கிராமத்து கெட்டப்பில் இந்தப் படத்தில் சூர்யா நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் படத்தை தயாரித்துள்ளது.

எதற்கும் துணிந்தவன் படம்
சூரரை போற்று, ஜெய் பீம் என அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் நடிகர் சூர்யா. இந்த இரு படங்களிலும் வித்தியாசமான கேரக்டர்களை ஏற்று நடித்திருந்தார். இந்தப் படங்கள் கொடுத்த உற்சாகத்தை அடுத்து தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்து வந்தார்.

ஜெய் பீம் படத்தின் வெற்றி
தீபாவளியையொட்டி அமேசான் ப்ரைமில் வெளியான ஜெய் பீம் மிகச்சிறப்பான வெற்றியை சூர்யாவிற்கு கொடுத்துள்ளது. இந்தப் படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது. ஐஎம்டிபியில் முதலிடம் பெற்ற முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையும் இந்தப் படத்திற்கு கிடைத்துள்ளது.

படப்பிடிப்பு நிறைவு
இந்நிலையில் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்துவந்த எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதை படத்தின் இயக்குநர் பாண்டிராஜும் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப் படுத்தியுள்ளார். இந்தப் படத்தில் கிராமத்து கெட்டப்பில் சூர்யா நடித்துள்ளார்.

வரவேற்பை பெற்ற பர்ஸ்ட் லுக்
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சூர்யாவின் ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும் நடிகர் சத்யராஜ், திவ்யா, வினய், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த ஜூலை மாதத்தில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பை பெற்றது.

பாண்டிராஜ் அறிவிப்பு
இந்நிலையில் தற்போது படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளதாக பாண்டிராஜ் தெரிவித்துள்ளார். மேலும் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், சூர்யா, ஒளிப்பதிவாளர் ரத்னவேலு மற்றும் படக்குழுவினருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். அடுத்தடுத்து படத்தின அப்டேட்டுகள் வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.

ரசிகர்கள் ஆர்வம்
நடிகர் சூர்யா அடுத்தடுத்த சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். அவரது தயாரிப்பிலும் சிறப்பான பல படங்கள் வெளியாகி வருகின்றன. தான் ஏற்கும் கெட்டப்புகளுக்கு நியாயம் செய்யும் வகையில் இவரது நடிப்பு மிளிர்ந்து வருகிறது. இந்நிலையில் இவரை கிராமத்து கெட்டப்பில் பார்க்க அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர். விரைவில் எதற்கும் துணிந்தவன் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











