முழுச்சிகிட்டிருக்கும் போதே கண்ணப்புடுங்கிட்டாங்க… பார்த்திபனின் பேஸ் புக் கணக்கு ஹேக் !

சென்னை : நடிகர் பார்த்திபனின் பேஸ் புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டு திரும்ப கிடைத்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் பார்த்திபன், எந்த ஒரு கருத்தையும் இணையத்தில் பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை பார்த்திபனின் முகநூல் கணக்கு ஹேக் செய்யப்பட்டது.

பார்த்திபன்

பார்த்திபன்

இயக்குநரும், நடிகருமான பார்த்திபனை ஒரு வித்தியாச விரும்பி என்றே சொல்லாம். எந்த விஷயத்திலும் வித்தியாசத்தை புகுத்தி அதில் அழகு சேர்த்து அதை நயன்பட சொல்லுவதில் அவருக்கு நிகர் அவரே. புதிய பாதையில் தொடங்கிய இவரது பயணம் ஒத்த செருப்பு சைஸ் 7 வரை நீண்டுக்கொண்டே செல்கிறது.

ஒத்த செருப்பு

ஒத்த செருப்பு

மனுஷன் என்னமா யோசிக்கிறாருய்யா என்று சொல்லும் அளவுக்கு ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு வித்தியாசம். ஒத்த செருப்பு படத்தில் படம் முழுவதும் தனி ஒருவராக திரையில் தோன்றி ஒரு வித்தியாசமான படத்தை கொடுத்து அதில் வெற்றியும் கண்டார். இத்திரைப்படம் இரு தேசிய விருதை தட்டிச் சென்றது.

இரவின் நிழல்

இரவின் நிழல்

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பார்த்திபன் இரவின் நிழல் என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இரவின் நிழல் திரைப்படத்தை சிங்கிள் ஷாட்டில் மொத்த திரைப்படத்தையும் இயககி முடித்துள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

முகநூல் ஹேக்

முகநூல் ஹேக்

இந்நிலையில், நடிகர் பார்த்திபன், ஞாயிற்றுக்கிழமை தனது முகநூல் பக்கம் சிலரால் ஹேக் செய்யப்பட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதில், என் FB hack செய்யப்பட்டிருக்கிறது. அறிவுள்ளவன் படமெடுக்கலாம், அறிவு மிகுந்தவர் ரசிகராகலாம், ஆனால்அறிவுக்கே பிறந்த சில sweet enemies Hack செய்கிறார்கள். அதை எதிர்கொண்டு அந்த அரக்கர்களை வதம் கொள்ள சற்றே நேரம் தேவை. அதுவரை அவ்விளம்பரங்களுக்காக என்னை மன்னியுங்கள் என பதிவிட்டுள்ளார்.

முழுச்சிகிட்டிருக்கும் போதே

முழுச்சிகிட்டிருக்கும் போதே

தற்போது தனது பேஸ் புக் கணக்கு திரும்ப கிடைத்துவிட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், முழுச்சிகிட்டிருக்கும் போதே கண்ணப் புடுங்கி காயலாங்கடையில வித்துட்டுப் போயிட்றாங்க. Bad hackers. கெடுத்திடும் புத்தி இருவழி கத்தி - எடுத்தவனையே குத்தி காவு அது வாங்கிடாதோ? இரவின் நிழலில் நான் எழுதிய பாடல் வரிகள். திரும்ப கிடைக்க உதவியவர்களுக்கு நன்றி. இனி இனிதே நட்பு தொடரும் எனக் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X