பாத்து எழுதுங்கப்பா.. என்ன கெட்ட வார்த்தைல திட்டுனாங்க.. பார்த்திபன் பேச்சு!

சென்னை: பார்த்திபன் இயக்கி நடித்த டீன்ஸ் திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 13 குழந்தைகளை வைத்து த்ரில்லர் ஜனரில் ஒரு அட்டகாசமான படத்தை கொடுத்துள்ளார். இப்படம் இதுவரை உலகளவில் ரூ.90 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கும் பார்த்திபன் மெய் சர்வதேச விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் மற்றும் இயக்குநர் வசந்தபாலன் கலந்து கொண்டார். இதில் பேசிய பார்த்திபன், நான் மெய் மறந்து மகிழ்ச்சியாக இருக்கும் இடம் இந்த சினிமா மட்டும்தான், அப்படி பட்ட எனக்கு இந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. விருது கொடுப்பது என்பது முத்தம் கொடுப்பது போல கொடுப்பவர்களுக்கும் மகிழ்ச்சி வாங்குபவர்களுக்கும் மகிழ்ச்சி.

parthiban Teenz

நடிகர் பார்த்திபன்: நாம் இந்த உலகத்தை விட்டு விடைபெறும் வரைக்கும் விடாமுயற்சி மிகவும் முக்கியமான ஒன்று. அந்த விடாமுயற்சியால் தான், நான் தற்போது டீன்ஸ் என்ற படத்தை எடுத்து இருக்கிறேன். வெறுமனே சினிமாவுக்கு வந்தோம், சம்பாதித்தோம் போனோம் என இருக்க விரும்பவில்லை. கடைசி வரைக்கும் சினிமாவை காதல் செய்வது கஷ்டமான விசயம். சினிமா பல நேரங்களில் என்னைக் கைவிட்டாலும், நான் விடமாட்டேன். தொடர்ந்து காதலிப்பேன்.

டீன்ஸ்: பெரிய நடிகர் கமல், பிரம்மாண்ட இயக்குநர் சங்கர், பெரிய நிறுவனமாக லைகா தயாரித்துள்ள இந்தியன் 2 உடன் என்படத்தை வெளியிடும் போது எனக்கு பயமாகத்தான் இருந்தது. பல எதிர்ப்புகள் வந்தன. ஆனால்,என் டீன்ஸ் படத்தின் மீது இருந்த நம்பிக்கையால் படத்தை துணிந்து வெளியிட்டேன். தமிழ் சினிமாவில் முதன்முதலில் பிரமாண்டத்தைக் கொண்டு வந்ததே இயக்குநர் சங்கர் தான். , லைகா போன்ற நிறுவனங்களால் தான் இதுபோன்ற பெரிய படங்களை தயாரிக்க முடியும். அப்படிப்பட்டவர்கள் மீது எனக்கு மரியாதை உள்ளது. ஆனால், சினிமா என்று வரும் போது, அதாவது போட்டி என சொன்னால் அவர்கள் கிரிக்கெட் ஆடினால், நான் கில்லி தாண்டு விளையாடுவேன். இதில் எந்தவித ஒப்பீடும் கிடையாது.

கெட்ட கெட்ட வார்த்தையால் திட்டு: செய்தியாளர் இந்தியன் 2 படம் பார்ப்பீர்களா என்று கேள்வி கேட்டார், டீன்ஸ் படம் வெற்றிப்படமாக வந்திருந்தால், அந்த சந்தோசத்தைக் கொண்டாடும் விதமாக அன்று மாலையே இந்தியன் 2 படத்தை பார்த்திருப்பேன். என் படத்திற்கான ரிசல்ட் சரியாக இல்லை என்பதால், நான் தியேட்டர் தியேட்டராக ஓடிக்கொண்டிருக்கின்றேன். அதனால், என்னால் இந்தியன் 2 பார்க்க முடியவில்லை என்றேன். ஆனால், செய்திகளில் இந்தியன் 2 ரிசல்ட் சரியாக இல்லாததால் நான் பார்க்கவில்லை என எழுதியுள்ளனர். இதனால் ட்விட்டரில் முகமே தெரியாத நபர்கள் கெட்ட கெட்ட வார்த்தைகளில் என்னை திட்டினார்கள். செய்தியாளர்கள் எழுதும் போது மட்டும் கொஞ்சம் கவனமாக எழுத வேண்டும் இது எனது வேண்டுகோள் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X