“இரவின் நிழல்“ மூன்றாம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்..மகிழ்ச்சியில் பார்த்திபன்!

சென்னை : இயக்குநர் பார்த்திபனின் இரவின் நிழல் படத்தின் மூன்று நாள் வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

இப்படத்தில், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், ப்ரியங்கா ரூத், ப்ரிகிடா சகா, ஆனந்த் கிருஷ்ணன் என பெரிய நடிகர் பட்டாளத்தை வைத்து கொண்டு மிகவும் அற்புதமான ஓர் படத்தை கொடுத்திருக்கிறார்.

96 நிமிடங்கள் படத்தை ஒரே டேக்கில் உருவாக்கியுள்ள பார்த்திபன். படத்தில் முதலில் 30 நிமிடம் படம் உருவான கதை ஒரு சிறு தொகுப்பாக காட்சிப்படுத்தபடுகிறது.

பார்த்திபன்

பார்த்திபன்

திரைத்துறையில் தனது முத்திரையை பதிக்க, வித்தியாசமான முயற்சிகளை தொடர்ந்து கையில் எடுத்து வித்தியாச விரும்பி என பெயர் எடுத்தவர் இயக்குநர் பார்த்திபன். இவர் இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் தமிழ் சினிமாவின் புதிய முயற்சியாக அமைந்து பாராட்டுக்களை குவித்தது. படம் முழுவதும் பார்த்திபன் மட்டும் திரையில் வியக்க வைத்திருந்தார். ஒத்த செருப்பு திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படம் தேசிய விருது உட்பட ஏராளமான விருதுகளையும் குவித்தது.

இரவின் நிழல்

இரவின் நிழல்

ஒத்த செருப்பு படத்தைப் போல் மற்றுமொரு வித்தியாசமான முயற்சியை கையில் எடுத்த பார்ர்திபன். இரவின் நிழல் திரைப்படத்தை ஒரே ஷாட்டில் படமாக்கி உள்ளார். அதுவும் Non Linear முறையில் என்பது தான் கூடுதல் சிறப்பம்சம். கிட்டத்தட்ட 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் பார்த்திபன் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிரிஜிடா எனும் புது நாயகி இதில் அறிமுகமாகியுள்ளார்

ஏ.ஆர். ரஹ்மான்

ஏ.ஆர். ரஹ்மான்

நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தை 'அகிரா புரொடக்‌ஷன்ஸ்' தயாரித்துள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது

பாக்ஸ் ஆபிஸ் வசூல்

பாக்ஸ் ஆபிஸ் வசூல்

வெள்ளிக்கிழமை வெளியானத் இரவின் நிழல் திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பார்த்திபனின் வித்தியாசமான முயற்சியை சோஷியல் மீடியாவில் அனைவரும் பாராட்டி வருகிறார்கள். இரவின் நிழல் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. படம் வெளியாகி மூன்று நாளில் மட்டும் கிட்டத்தட்ட ரூ.2 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. திரையரங்கில் மக்கள் கூட்டத்தை பார்த்த பார்த்திபன் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X