twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ‘’144 கவிதைகள்’’ பார்த்திபன் எழுதிய புதுக்கவிதை.. பார்தி 'fun' என்று பாராட்டிய பாக்யராஜ் !

    |

    சென்னை : 144 கவிதைகளை எழுதிய பார்த்திபனுக்கு வாழ்த்துக்கள் கூறினார் இயக்குனர் பாக்யராஜ்.

    சினிமாவில் பல கலைஞர்கள் இருந்தாலும் சிலர் மட்டுமே அனைவராலும் பாராட்டும் வகையாக இருப்பார்கள். அதில் அனைவருக்கும் பிடித்தவர்கள் என்று ஒரு தனி லிஸ்ட் போட்டுக்கொண்டே போகலாம். அதிலும் பல திறமைகள் கொண்டவர்கள் என்ற கணக்கில் சிலரால் மட்டுமே ஈடு கட்ட முடியும் அந்த வகையில் பார்த்திபன் அவர்கள் முக்கியமான பங்கு வகிக்கிறார் .

    நடிப்பு மட்டும் அல்லாமல் இவர் சினிமாவிற்கு தன்னை அர்ப்பணித்த விதம் அருமை என்றே சொல்லலாம். இவரை பற்றி தெரியாத குழந்தைகளுக்கு கூட இவர் செய்யும் சேட்டைகள் மூலம் சிரிக்க வைப்பார் . உதாரணத்திற்கு "வெற்றி கொடி கட்டு ,குண்டக்க மண்டக்க போன்ற படங்களில் வடிவேலுவுடன் இவர் செய்யும் சேட்டை அற்புதமாக இருக்கும் .

    மகள் படிப்புக்கான ரூ.5 லட்சத்தை உதவிக்கு அளித்த சலூன் கடைகாரர்.. படிப்புச் செலவை ஏற்ற பார்த்திபன்!மகள் படிப்புக்கான ரூ.5 லட்சத்தை உதவிக்கு அளித்த சலூன் கடைகாரர்.. படிப்புச் செலவை ஏற்ற பார்த்திபன்!

    எப்போதும் இவர் இருக்கும் இடத்தில் நகைச்சுவையுடன் கருத்துக்களும் இருக்கும். பலரையும் சிந்திக்க வைக்கும் திறமை சிலரிடம் மட்டுமே இருக்கும். அந்த திறமை முழு உருவமாக பார்த்திபன் அவர்களை நாம் பார்க்கலாம் .

     கவிதை புத்தகம்

    கவிதை புத்தகம்

    உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள திரை நட்சத்திரங்கள், உடற்பயிற்சி, புகைப்படம் என பலவற்றை பகிர்ந்து வருகின்றனர். இந்த கொரோனா நேரத்திலும் வித்தியாசம் காட்டி உள்ளார் பார்த்திபன். அந்த வகையில் பார்த்திபன் அவர்கள் 144 கவிதைகள் என்று ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதை தொடர்ந்து தன் சினிமா வாழ்வின் குருவான இயக்குனர் பாக்கியராஜ் அவர்களுக்கு இந்த புத்தகத்தினை அனுப்பியுள்ளார். அதை பாரட்டும் விதமாக தன் மகனான ஷாந்தனு அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

     வித்தியாசமான தலைப்பு

    வித்தியாசமான தலைப்பு

    பொதுவாக நம் வாழ்வில் தினமும் நேற்றைய தேதியை காலண்டரில் கிழிக்கும் போது நேற்று நாம் என்ன உருப்படியாக கிழித்தோம் என்று நினைப்போம். ஆனால் என்னுடைய சிஷியன் நேற்றையை தேதியை கிழிக்கும் போது இன்று உருப்படியாக என்ன செய்யபோகிறோம் என்று நினைப்பார் போல! ஏனென்றால் தினமும் புதிதாக எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான் அவரை வித்தியாசமான மனிதராக காட்டுகிறது. அவர் எழுதிய இந்த கவிதை புத்தகத்தில் இந்த நிலைமைக்கு ஏற்றார் போல 144 என்றே பெயர் வைத்துள்ளார்.

     ரசிக்கும்படியான கவிதை

    ரசிக்கும்படியான கவிதை

    அவர் எனக்கு அனுப்பிய இந்த புத்தகத்தில் அவர் எழுதிய கவிதைகள் அனைத்தையும் படித்தேன். அதில், ஒரு சில கவிதைகளை தவிர்த்து அனைத்துமே ரசிக்கும் படியாக இருந்தது. அவர் உருவாக்கிய விதமும் கவிதைகளுக்கு ஏற்றார் போல் உள்ள ஓவியமும் நன்றாகவே உள்ளது. பார்த்திபன் என்பதை விட பார்தி 'fun' என்றே சொல்லாம் என்று பாக்கியராஜ் அவரை வெகுவாக பாராட்டி உள்ளார்.

     மூளைக்கு வேலை

    மூளைக்கு வேலை

    ஆங்கிலமும் தமிழும் கலந்து எழுதி இருக்கும் விதம் அருமை என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். என்னுடயை சிஷ்யனை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறேன் என்று தன் வீடியோவை முடித்தார். பார்த்திபன் அவர்கள் எப்போதும் எதிலும் ஒரு வித்தியாசத்தை விரும்புவார் என்பது அனைவருக்கும் தெரியும்.இந்த ஊரடங்கு நேரத்தில் மூளைக்கு வேலை கொடுத்து இருக்கிறார் பார்த்திபன். இந்த 144 தடை சட்டத்தை எப்படி பயன்படுத்த முடியுமோ அப்படி கச்சிதமாக பயன்படுத்தியிருக்கிறார் என்றே சொல்லலாம். இந்த பதிவை பார்த்த அனைவரும் இவரை பாராட்டிக்கொண்டே இருக்கின்றனர்.

    English summary
    Director Parthiban on his latest book '144 kavithaigal'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X