இரவின் நிழல்..நிர்வாண காட்சியில் நெருடல் இல்லை..புனிதம் மட்டுமே தெரிகிறது..பார்த்திபன் பேட்டி!

சென்னை : இரவின் நிழல் படத்தில் வரும் நிர்வாண காட்சி குறித்து நடிகர் பார்த்திபன் விளக்கமாக பேட்டியில் கூறியுள்ளார்.

புதுமை இயக்குநரும், நடிகருமாக பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் இரவின் நிழல். இந்த திரைப்படம் ஜூலை 15ந் தேதி வெளியாக உள்ளது.

இந்தப் படத்தில் நிர்வாணமாக நடித்தவர் நடிகை பிரிகிடா. இவர் ஒரு குறும்படத்தில் பவி ரீச்சர் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து தனக்கென ஏராளமான ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார்.

இரவின் நிழல்

இரவின் நிழல்

ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்கு பின்னர் பார்த்திபன், இரவின் நிழல் என்ற படத்தை இயக்கியுள்ளார். ஒத்த செருப்பு படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே இடம் பெற்றிருந்தைப் போல இரவின் நிழல் படம் நான் லீனியர் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர். ரஹ்மான்

ஏ.ஆர். ரஹ்மான்

நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. வரலக்‌ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தை 'அகிரா புரொடக்‌ஷன்ஸ்' தயாரித்துள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது.

ஜூலை 15ந் தேதி ரிலீஸ்

ஜூலை 15ந் தேதி ரிலீஸ்

இரவின் நிழல் திரைப்படம் ஜூலை 15ந் தேதி வெளியாக உள்ள நிலையில், அதற்கு முன்பாக பத்திரிக்கையாளர்களுக்கு படம் திரையிட்டு காட்டப்பட்டது. இதுகுறித்து பேட்டி அளித்த பார்த்திபன், பத்திரிக்கையாளர்கள் இந்த படத்தை எப்படி பார்க்கிறார்கள் என்பதை முதலில் தெரிந்த கொள்ள விருப்பியதால், முதலில் பத்திரிக்கையாளர்களுக்கு இந்த படம் திரையிடப்பட்டது என்றார்.

நிர்வாண காட்சி

நிர்வாண காட்சி

மேலும் இந்த படத்தில் வரும் நிர்வாண காட்சி குறித்து பேசிய பார்த்திபன், இப்படத்தில் பிரிகிடா நிர்வாணமாக காட்சியில் நடித்திருக்கிறார். அந்த கதாபாத்திரம் மிகவும் புனிதமானது. அந்த படத்திற்கு அப்படியொரு காட்சி தேவையான ஒன்றாக இருந்தால், அந்த கோலத்தில் இருந்தால் தான் சரியாக இருக்கும் என்பதால் அப்படி ஒரு காட்சி படத்தில் வைக்கப்பட்டது.

நெருடல் இல்லை

நெருடல் இல்லை

நடிகை பிரிகிடாயிடம் இந்த காட்சி குறித்து தெளிவாக சொல்லிவிட்டுத்தான் அந்த காட்சியை எடுத்து முடித்தோம். படம் பார்க்கும் பலரை அந்த காட்சி ஆச்சர்யப்படுத்தி உள்ளது படத்தை பார்த்தவர்கள் பாராட்டி வருகிறார்கள். அந்த நிர்வாணகாட்சியை திரையில் பார்க்கும் போது எந்தவித நெருடலும் இல்லை அங்கே புனிதம் மட்டுமே தெரிந்தது என பேட்டியில் நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X