Rajinikanth: 25 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினிக்கு கதை சொன்ன பார்த்திபன்.. அட இந்த ஸ்டைல் படமா!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் 70 வயதை கடந்த நிலையிலும் மிகச் சிறப்பாக அடுத்தடுத்த இளம் இயக்குனர்களுடன் இணைந்து சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். ஜெயிலர் படம் கடந்த ஆண்டில் வெளியாகி மிகச்சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த். இந்த படம் தீபாவளியையொட்டி அக்டோபர் மாதத்தில் ரிலீசாகவுள்ளது.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தின் கூலி படத்தில் இணைந்துள்ள ரஜினிகாந்த், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னதாக பார்த்திபன் இயக்கத்தில் நடிக்கவிருந்தது குறித்து பார்த்திபன், தன்னுடைய சமீபத்திய பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார். தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ள மகாராஜா பட ஸ்டைலில் தான் ரஜினிக்கு கதை சொன்னதாக பார்த்திபன் தன்னுடைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

Director Parthiban revealed the story he made for Superstar Rajinikanth

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் பல ஆண்டுகளாக தமிழ் சினிமா மட்டுமில்லாமல் பாலிவுட் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து ஏராளமான ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருபவர். இவரை இயக்க பல இயக்குனர்கள் வரிசையில் காத்திருக்கும் சூழலில் அவருக்கும் சில இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றும் விருப்பம் தொடர்ந்து இருந்து வருகிறது. இதை பல இன்டர்வியூக்களிலும் ரஜினிகாந்த் வெளிப்படுத்தியதை பார்க்க முடிகிறது. தற்போது அடுத்தடுத்து இளம் இயக்குநர்களுடன் இணைந்து படங்களில் பணியாற்றி வருகிறார் ரஜினிகாந்த். அந்த வகையில் கடந்த ஆண்டில் நெல்சன் திலிப் குமாருடன் இணைந்து ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார்.

ரஜினி படங்கள்: ஜெயிலர் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமாக மாறியது. இந்நிலையில் தன்னுடைய மகள் இயக்கத்தில் லால் சலாம் படத்திலும் அடுத்ததாக டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்திலும் நடித்துள்ளார் ரஜினிகாந்த். இந்நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் இணைந்துள்ளார். 70 வயதை கடந்த நிலையிலும் மிகப்பெரிய உற்சாகத்துடன் அடுத்தடுத்த இயக்குனர்களுடன் அடுத்தடுத்த படங்களில் இணைந்து பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ரஜினிகாந்துடன் தான் இணையவிருந்த படம் குறித்து நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் எனது சமீபத்திய பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார்.

ரஜினிக்கு கதை சொன்ன பார்த்திபன்: கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னதாக ரஜினி தன்னுடன் இணைந்து பணியாற்ற விரும்பியதாகவும் இதையொட்டி அவருக்கு ஒரு கதையை தான் கூறியதாகவும் தன்னுடைய ஸ்டைலில் ரஜினியை இயக்க தான் திட்டமிட்டதாகவும் பார்த்திபன் தற்போது தன்னுடைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இடைவேளை வரை ரஜினிகாந்த் பழிவாங்க உள்ள நபர் குறித்து வெளிப்படுத்தாமல் தான் கதையை கூறியதாகவும் பழிவாங்கும் நோக்கம் மட்டுமே ரஜினியின் கண்களில் தெரியும் என்பதாக தான் ஒரு கதைக்களத்தை ரஜினிக்காக உருவாக்கியதாகவும் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

வித்தியாசமான கதைக்களம்: படையப்பா ஸ்டைலில் தான் ரஜினியை இயக்க விரும்பவில்லை என்றும் அவரை வித்தியாசமாக காட்ட நினைத்ததாகவும் பார்த்திபன் மேலும் குறிப்பிட்டுள்ளார். தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியாகி உள்ள மகாராஜா பட ஸ்டைலில் தான் 25 ஆண்டுகளுக்கு முன்னதாகவே ரஜினிகாந்த்திற்காக கதையை உருவாக்கி இருந்ததாகவும் பார்த்திபன் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த படம் தவிர்க்க முடியாத காரணங்களால் எடுக்க முடியாமல் போனதாகவும் அவர் கூறியுள்ளார்.

பன்முகத் திறமை: நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளுடன் கோலிவுட்டில் வலம் வருபவர் இயக்குனர் பார்த்திபன். வித்தியாசமான கதைக்களங்கள், வித்தியாசமான சொற்றொடர்கள், வித்தியாசமான பேட்டிகள், வித்தியாசமான படங்கள் என பார்த்திபன் மாஸ் காட்டி வந்த சூழலில் தற்போது அதிகமாக இவரை படங்களில் நடிகராக பார்க்க முடிகிறது. இயக்கத்திலும் அவ்வப்போது இணைந்து வித்தியாசமான கதைக்களங்களில் படங்களை கொடுத்து வருகிறார் பார்த்திபன். அந்த வகையில் 25 ஆண்டுகளுக்கு முன்னதாகவே ரஜினியை வைத்து இயக்க தான் மேற்கொண்டிருந்த கதை மற்றும் அதன் திட்டம் குறித்து தற்போது இவர் கூறியுள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X