twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எவரெஸ்ட்டை போல அவரை வியந்து பார்த்தேன்..பார்த்திபன் யாரை இப்படி புகழ்கிறார்!

    |

    சென்னை : எவரெஸ்ட் சிகரத்தை பார்த்ததை போல அவரை பார்த்து வியந்து விட்டேன் என்று இயக்குநர் பார்த்திபன் ஒரு இயக்குநரை வெகுவாக புகழ்ந்துள்ளார்.

    நடிகர் மற்றும் இயக்குநர் ஆர் பார்த்திபன் வித்தியாசமான முயற்சிகளுக்கு பெயர் போனவர். இவரது நடிப்பும் சரி, இயக்குமும் சரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுக்கும். இயக்கம், நடிப்பு என இரண்டையும் சமமாக செய்து வருகிறார்.

    தற்போது இவரது கைவண்ணத்தில் இரவின் நிழல் என்ற படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

    இது தான் ராஜமெளலியின் கனவு படமா...அவரே தந்த அசத்தல் அப்டேட் இது தான் ராஜமெளலியின் கனவு படமா...அவரே தந்த அசத்தல் அப்டேட்

    இரவின் நிழல்

    இரவின் நிழல்

    கலையின் மீது என்றும் தீராத தாகத்தோடு தொடர்ந்து புதுப்புது வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குனர் பார்த்திபனின் அடுத்த சாதனை முயற்சியாக உலகில் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் இரவின் நிழல். இப்படம் 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது.

    சிங்கிள் ஷாட்டில்

    சிங்கிள் ஷாட்டில்

    நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. இப்படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அண்மையில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன.

    கேன்ஸ் திரைப்பட விழாவில்

    கேன்ஸ் திரைப்பட விழாவில்

    பயாஸ்கோப் பிலிம் ஃபிரேமர்ஸ் தயாரிப்பில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இரவின் நிழல் திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது பெற்ற VFX கலைஞர்களான காட்டலாங்கோ லியோன் மற்றும் கிரேக் மேன் ஆகியோர் பணியாற்றி உள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் படத்தின் காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன. இது இந்த படத்திற்கு கிடைத்துள்ள பெருமையாக பார்க்கப்படுகிறது.

    ஜூலை 15ந் தேதி ரிலீஸ்

    ஜூலை 15ந் தேதி ரிலீஸ்

    இப்படம் ஜூலை 15ந் தேதி வெளியாக உள்ள நிலையில், பார்த்திபன் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள பார்த்திபன், உங்களுக்கு பிடித்த இயக்குநர் யார் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதில், குறிப்பிட்டு ஒருவரை சொல்ல முடியாது நிறையபேர் இருக்காங்க ஆனால், சமீபத்தில் என் மனம் கவர்ந்தவர் லோகேஷ் கனகராஜ் என்றார்.

    Recommended Video

    தமிழில் வணக்கத்தை போட்ட அபிஷேக் பச்சன் | இரவின் நிழல் இசை வெளியீட்டு விழா | Iravin Nizhal *Kollywood
    புகழ்ந்த பார்த்திபன்

    புகழ்ந்த பார்த்திபன்

    விக்ரம் படம் பார்த்து வியந்து விட்டேன், கமல், விஜய்சேதுபதி, பகத் பாஃசில், சூர்யா என நான்கு ஜாம்பவான்களை வைத்து படம் எடுப்பது என்றாலே குழம்பிவிடும் ஆனால், அதை கச்சிதமாக செய்து இருக்கிறார் லோகேஷ். அதுவும் எப்படி அவரால் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுக்க முடிகிறது என்று தெரியவில்லை என்று லோகேஷ் கனகராஜை புகழ்ந்து பேசினார் பார்த்திபன்.

    English summary
    Director parthiban praised in Director lokesh kanagaraj
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X