சீதா அனுப்பிய மெசேஜ்.. விவாகரத்திற்கு காரணமே இதுதான்.. மனம் திறந்த பார்த்திபன்!

சென்னை: இரவின் நிழல், டீன்ஸ் என வித்தியாசமான கதையை சிந்தித்து அதை திரைப்படமாக திரையில் காட்டுவதில் கைதேர்ந்தவர் இயக்குநர் பார்த்திபன். இவர் இயக்குநராக மட்டுமில்லாமல் நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அண்மையில் ஒரு பேட்டியில் சீதாவை பிரிந்தது குறித்து வருத்தப்பட்டு பேசி உள்ளார். அது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

இயக்குனர் கே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பார்திபன் புதிய பாதை படத்தின் மூலம் இயக்குனராகினார். அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.இருவரும் 11 ஆண்டுகாலம் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். விவாகரத்திற்கு பின் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த சீதா, அதன் பின் சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இருவரும். விவாகரத்து பெற்று பிரிந்தாலும் பிள்ளைகளில் எதிர்காலத்திலும் கவனமாக இருக்கிறார்கள்.

Parthiban Seetha divorce

பார்த்திபன் பேட்டி: அண்மையில், அளித்த பேட்டியொன்றில் சீதாவை விவாகரத்து செய்ய காரணம் என்ன என்ற உண்மையை கூறியிருக்கிறார். காதல் என்பது மிகவும் புனிதமானது என்று சொல்வார்கள். அந்த புனிதமான காதலை நான் உணர்ந்தது சீதாவிடம் தான். அந்த காதல் எப்படிப்பட்ட காதல் என்றால், நான் இப்போது எந்த காரணத்தையும் கூறி எந்த உண்மையையும் மறைக்க விரும்பவில்லை. காதலையும் , பொய்யையும் கடந்துவிட்டோம். நான் ரொம்ப சாதாரண ஆளாக இருக்கும் போது நீ ரொம்ப பெரிய ஆளாக வருவாய், பங்களான்னு வாங்குவ என்று ஒரு ஜோசியம் சொன்னது அந்த காதல் தான்.

விவாகரத்துக்கு காரணம்: இப்போது விவாகரத்து என்று எல்லோரும் சொல்லும் போது, அது வேண்டாம் என்று நானே புரியாமல் அதை விரட்டிட்டு இருந்தேன். விவாகரத்து எல்லாம் வேண்டாம் எப்படியாவது சமாளித்துவிடலாம் என்று என் மனைவியிடம் கேட்டுட்டு இருந்தேன்.சீதா, மீண்டும் நடிக்க போறேன் என்று சொன்னபோது நான் அவள் கூட இருந்து சப்போர்ட் பண்ணுறேன் என்று சொல்லி இருக்கனும், ஆனால், அப்போது குடும்ப சூழ்நிலை, குழந்தைகள் பார்க்க வேண்டும் என்று நான் வித்தியாசமாக யோசித்து விட்டேன். அதனால் தான் எங்களுக்குள் பிரிவு வந்தது அதை நான் அன்று செய்ய தவறிவிட்டேன்.

சீதா அனுப்பிய மெசேஜ்: தொடர்ந்து பேசிய பார்த்திபன், அண்மையில் சீதாவின் தாயார் இறந்தபோது இறுதிச்சடங்குக்கான அனைத்து ஏற்பாடுகளையும் உடன் இருந்து நான் பார்த்தேன். மறுநாள் சீதா தனக்கு நன்றி கூறி குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார். இன்னைக்கு வரைக்கும் இரண்டு பேருக்குமே வருத்தமே தவிர, மரியாதையும் அன்பும் அப்படியேத்தான் இருக்கு, அதில் எந்த மாற்றமும் இல்லை. எங்கள் திருமணம் முறிவு பற்றி பிள்ளைகளிடம் பேசியதே கிடையாது. மூணு பேருக்கும் அம்மாவை ரொம்ப பிடிக்கும். பொதுவாக கணவன் மனைவி பிரிந்துவிட்டால், ஒருவரை ஒருவர் கெட்டவங்கன்னு சொல்லிக் கொள்வார்கள்.ஆனால், நாங்கள் இருவரும் அப்படி நடந்து கொண்டதே இல்லை. கணவன் மனைவியாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் புரிதலும், அடுத்தவர் முன்னேற்றத்தை விரும்பும் மனப்பான்மையும் அவசியம் என்று பார்த்திபன் அந்த பேட்டியில் பேசி இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X