ஆஸ்கர் விருது வென்ற மூன்று பேர் இணைந்துள்ள இரவின் நிழல்... பர்ஸ்ட் லுக் வெளியானது!

சென்னை : நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் ஒரே ஷாட்டில் உருவாக்கப்பட்டுள்ள படம் இரவின் நிகழல். பார்த்திபன் இயக்கத்தில் ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்கு பிறது இந்தப் படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் இப்போது வெளியாகியுள்ளது.

இயக்குநர் பார்த்திபன்

இயக்குநர் பார்த்திபன்

நடிகர் பார்த்திபன் எப்போதுமே புதுமைக்கு பெயர் போனவர். ஆரம்ப காலத்தில் இருந்தே இயக்கமானாலும் நடிப்பானாலும் தன்னுடைய தனித்தன்மையை அதில் வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது நடிப்பு மற்றும் இயக்கம் இரண்டிலும் இவர் பிரத்யேக கவனத்தை செலுத்தி வருகிறார்.

தேசிய விருதை பெற்றுத்தந்த படம்

தேசிய விருதை பெற்றுத்தந்த படம்

இவரது முந்தைய படமான ஒத்த செருப்பு சைஸ் 7 படம் விமர்சன ரீதியாக அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்தப் படத்தில் பார்த்திபன் மட்டுமே நடித்திருந்தார். இந்தப் படத்திற்காக தேசிய விருதையும் அவர் பெற்றார். தொடர்ந்து அடுத்தடுத்த வித்தியாசமான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார்.

சிங்கிள் ஷாட் படம்

சிங்கிள் ஷாட் படம்

தற்போது அவரது நடிப்பு மற்றும் இயக்கத்தில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ள படம் இரவின் நிழல். இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இயக்குநர் மணிரத்னம் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்

பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்

மேலும் இந்த பர்ஸ்ட் லுக்கை போஸ்டராக பார்த்திபன் வெளியிட்டுள்ளார். இதில் படத்தின் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் பேசியுள்ளார். பார்த்திபனின் இத்தகைய வித்தியாசமான முயற்சிகள் குறித்து அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் இந்த வீடியோவிலேயே படத்தின் பர்ஸ்ட் லுக்கும் வெளியாகியுள்ளது.

ஆஸ்கர் விருது கலைஞர்கள்

ஆஸ்கர் விருது கலைஞர்கள்

இந்தப் படத்தில் ஆஸ்கர் விருது பெற்ற மூவர் இணைந்துள்ளனர். படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில், ஆஸ்கர் விருது வென்ற கட்டா லங்கோ லியோன் விஷுவல் எபெக்ட்ஸ் மேற்பார்வையாளராகவும் கிரைக் மான் என்பவர் சவுண்ட் டிசைன் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X