துபாயில் பணம் இல்லாமல் தவித்த பார்த்திபன்.. நழுவிய நண்பர்கள்.. மொத்தத்தையும் கொடுத்த ஓட்டுநர்.. என்ன மனுஷன்யா?
சென்னை: தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவர் பார்த்திபன். கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக திரைத்துறையில் ஜொலித்துவரும் அவர் நடிகராகவும் வென்றவர். கடைசியாக அவரது இயக்கத்தில் டீன்ஸ் திரைப்படம் வெளியானது. ஆனால் அது பெரிய வெற்றியை பெறவில்லை. அதேசமயம் புதிய முயற்சி என்று பலரால் பாராட்டப்பட்டது. இந்நிலையில் அவரது சோஷியல் மீடியா பதிவு ஒன்று கவனத்தை ஈர்த்திருக்கிறது.
புதிய பாதையை இயக்கி இயக்குநராக அறிமுகமான பார்த்திபன் அந்தப் படத்திலேயே நடிகராகவும் அறிமுகமாகிவிட்டார். படம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. அதனையடுத்து அவர் இயக்கிய பல படங்களில் வித்தியாசமான முயற்சிகளை கையாண்டிருந்தார். உதாரணமாக கதையே இல்லாமல் எடுத்த கதை திரைக்கதை வசனம் இயக்கம், இவர் மட்டுமே நடித்த ஒத்த செருப்பு ஆகிய படங்கள் எல்லாம் பலரது புருவத்தை உயர்த்த வைத்தன.
நடிகராகவும் பிஸி: கடைசியாக அவர் டீன்ஸ் படத்தை இயக்கினார். அந்தப் படத்தையும் வழக்கம் போல வித்தியாசமாகவே எடுத்திருந்தார். ஆனால் ஏதோ ஒன்று படத்தில் மிஸ் ஆக ரசிகர்களிடன் வரவேற்பை பெறாமல் போய்விட்டது. இது ஒரு பக்கம் இருக்க ஆயிரத்தில் ஒருவன்,நானும் ரௌடிதான், பொன்னியின் செல்வன் என பல படங்களில் சிறந்த நடிப்பையும் வெளிப்படுத்தியிருந்தார். ஒத்த செருப்பு படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு அரசு விருதையும் அவர் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் பதிவு: இந்நிலையில் துபாய்க்கு சென்றபோது அவசரமான சூழ்நிலையில் பணம் இல்லாமல் தவித்ததையும், ஓட்டுநர் ஒருவர் உதவி செய்ததையும் சோஷியல் மீடியாவில் பதிவாக வெளியிட்டிருக்கிறார் அவர். அந்தப் பதிவில் அவர், "Hospital செல்லும் வழியில் credit/debit card உள்ள என் purse-ஐ hotel-லில் வைத்து விட்டு மறதியோடு சென்று விட்டேன். Bill 7911.25 Dirhams! which is commonly abbreviated as AED நம்மூர் Gandhi talks-ல் 1,97,781.25 (approxi)
கையேந்தும் அவசர நிலை: Purse miss-Hotel long dis So, நண்பர்களிடம் கைமாத்தாகக் கையேந்தும் அவசர நிலை! ஊதும் சிகிரெட்டை ஒதுக்கிவிட்டு உதடு பிதுக்கினர் சிலர்,signal கிடைக்கவில்லையென 🚦-ஐ cross செய்தபடி stearing-ஐ திருப்பினர் சிலர், அந்தப் பணக்கார்ர்களின் மனதில் .... கேட்பது ஒரு celebrity கொடுத்துவிட்டு திரும்ப கேட்க முடியாமல் போய் விட்டால்?நியாயம் தானே? குறுகிய காலத்திற்குள் என் மனம் சற்றே கருகியது அதை இறுகிய என் முகம் வெளியில் காட்டிக் கொடுத்து விட்டது.
ஒரு குரல்: பின்புறமிருந்து ஒரு தன்மையான குரல்" சார் நீங்க தப்பா நினைக்கலைன்னா.." என்றபடி கைநிறைய அந்நாட்டு currency-ஐ நீட்டினார் ஆச்சர்யத்துடன் பார்த்தேன் "5000 தான் இருக்கு கொஞ்சம் time குடுத்தீங்கன்னா மீதியை புரட்டிகிட்டு வர்றேன்."நீங்க என்ன சார் பண்றீங்க"ன்னு கேட்க,"டிரைவர்"-என்றார் டக்கென உட்புகுந்து மனதில் நின்றார். பணக்காரர்கள் வரூம் ஆனா வராதூ என என்னத்தே கண்ணையாவாக சிந்திக்கும் வேளையில் மொத்த சேமிப்பையே வராவிட்டாலும் பரவாயில்லையென தரத் தயாரானவரின் தரமான இதயத்தை சற்றே உற்று நோக்கியப் பின் பணத்தை அவர் பாக்கெட்டில் வைத்துவிட்டு கரங்களை கண்களில் ஒற்றிக் கொண்டேன்.
இப்பதிவு அம்மாமனிதரின் மனிதாபிமானத்தை பறைசாற்றவேத் தவிர, மற்றோரை கோடியில் dirham பெற்றோரை குறை சொல்ல அல்ல. கோடிகளில் உள்ளோர் உள்ள நாடுகளில் , மனம் படைத்தோர் மட்டும் பல கோடியில் ஒருவர் இருவரே உளர். உணர்! அதற்குள் என் மகள் கீர்த்தனாவிடம் கேட்டிருந்த online transaction done successfully ! இடையில் என் மீது சந்தேகப்பட்ட Philippines receptionist-யிடம் அவசரப்பட்டு அடகு வைத்திருந்த என் passport-ஐ மீட்டுக் கொண்டு வந்தேன். பணம் போயின் பிணமே அதுவும் மானம் போன பிணமே! புகைப்படத்தில் அந்த Mr. A R Thajuddeen Driver by profession but really a great human" என நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டிருக்கிரார்.


Click it and Unblock the Notifications











