தொல்லை கொடுத்த விசில் சத்தம்.. உங்களுக்கு என்ன பிரச்சனை?.. ட்ரெயின் படவிழாவில் கடுப்பான பார்த்திபன்

சென்னை: இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ட்ரெயின்' படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இயக்குநர்கள் அமீர், சசி, வெற்றிமாறன் என பிரபலங்கள் பலரும் கலந்துகொண்ட இந்த விழாவில் பார்த்திபன் கலந்து கொண்டு தனக்கே உரிய பாணியில் பேசினார்.

அதில், தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டு இருப்பது விசில் சத்தம். அதேபோல இந்த நிகழ்ச்சி ஆரம்பித்து கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு மேலாகியும், இவ்வளவு நேரமும் வெற்றிகரமாக நடந்து கொண்டு இருக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் உங்களின் விசில் சத்தத்தோடு கூடிய என்கரேஜ்மென்ட் தான். இந்த ட்ரெய்லரை நீங்கள் பார்க்கும் போது உங்களுடைய ரியாக்ஷனை நான் கவனித்தேன், ஒரு அற்புதமான விசில் சத்தம் உங்களிடம் இருந்து வந்தது. அதுதான் இந்த திரைப்படத்தின் வெற்றியை நிர்ணயிக்க கூடிய விஷயம். அதனால் உங்களுக்கு என்னுடைய முதல் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

Train mysskin Parthiban

ஹாலிவுட் தரத்தில் ட்ரெயின்: ட்ரெயின் திரைப்படத்தினுடைய ட்ரெய்லரை பார்க்கும்போது எனக்கு என்ன தோன்றியது என்றால், ஒரு தமிழ் படத்திற்கு ஆங்கிலத்தில் தலைப்பு வைத்திருக்கிறார்கள் என நினைத்தேன். ஆனா, ட்ரெயிலரை பார்த்தவுடன் தான் தெரிந்தது படமே ஒரு ஆங்கில படம் போல தான் இருக்கிறது என்று. ட்ரெயின் என்கிற பெயர் மட்டுமல்ல, படமும் ஆங்கில படம் போல தான் இருக்கிறது. "ஹே ராம்" படத்தை பார்த்து விட்டு ராதிகா, இந்த படத்தினுடைய தமிழ் ரைட்சை எனக்கு கொடுப்பீர்களா... என கேட்டார்களாம்? அதேபோலத்தான் ட்ரெயின் படத்தை பார்த்துவிட்டு ஏதாவது தயாரிப்பாளர்கள் இந்த படத்தின் தமிழ் ரைட்ஸை எங்களுக்கு கொடுப்பீர்களா என கேட்பார்கள் என எனக்கு தோன்றுகிறது என்றார்.

உள்ளே வெளியே 2 அப்டேட்: தொடர்ந்து பேசிய பார்த்திபன், நான் உள்ளே வரும்போது 'சார் சட்டையை மாத்தி போட்டு விட்டு வந்து விட்டீர்களா? என கேட்டார்கள். நான் வேண்டுமென்று தான் இப்படி போட்டு வந்தேன். ஏனென்றால் அடுத்து என்னுடைய படமான உள்ளே வெளியே 2 உருவாக இருக்கிறது. அதற்காகத்தான் இந்த சட்டையை உள்ளே வெளியே என மாற்றி போட்டு வந்திருக்கிறேன். என்னடா இந்த படத்தினுடைய ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் என் படத்தினுடைய பிரமோஷனைப் பற்றி பேசுகிறேன் என நினைக்க வேண்டாம்.
இதற்கு ஒரு காரணம் இருக்கு, ஒவ்வொரு மனுஷனுமே உள்ளுக்குள் ஒருவனாக வெளியில் ஒருவனாக இருப்பார்கள். உள்ளுக்குள் மிகவும் புனிதராக இருப்பார்கள் வெளியில் வேறு ஒரு மனிதர் போல இருப்பார்கள். அதேபோலத்தான் ட்ரெயினில் படத்தில் 48 கம்பார்ட்மென்ட் இருக்கின்றன. முதல் கன்பார்ட்மெண்ட்க்கும் 48வது கம்பார்ட்மெண்டுக்கும் உள்ள இடைவெளி போல தான் ஒவ்வொரு மனிதனும் இருப்பார்.

மிஸ்கினை ரசிப்பேன்: ஆனால் மிஷ்கினுக்கு உள்ளே ஒன்று வெளியே ஒன்று இருக்கவே இருக்காது. இரண்டும் கிட்டத்தட்ட ஒன்று போல தான் இருக்கும், 25வது கம்பார்ட்மெண்டக்கும் 23வது கம்பார்ட்மெண்ட்க்கும் இருப்பது போல மிக மிக குறைந்த அளவு தூரம் தான் இருக்கும். அவர் மனதுக்குள் என்ன நினைக்கிறாரோ.. அதை வெளியில் அப்படியே பேசுவார். அதை நான் மிகவும் ரசிப்பேன். ஒரு இயக்குனர் என்பதை மீறி ஒரு மனிதனாக நான் அவரை ரசித்து இருக்கிறேன். இதே போல நடிகர் எம்.ஆர் ராதா, அவர் மிகச் சிறந்த நடிகராக இருந்தாலும், உண்மையைப் பேசும் ஒருவராக இருந்தார். அவரைப்போல மனநிலையை கொண்டவர் தான் மிஸ்கின் என்றார்.

உங்களுக்கு என்ன பிரச்சனை: இப்படி பார்த்திபன் மேடையில் மிஷ்கினைப் பற்றி பேசிக்கொண்டே இருக்க, ஆடியன்ஸ் பக்கமிருந்த ரசிகர்கள் சிலர் எதற்கெடுத்தாலும் தொடர்ந்து விசில் அடித்துக் கொண்டே தொந்தரவு செய்தனர். இதனால் ஒரு கட்டத்தில் கடுப்பான பார்த்திபன், ரசிகர்களை நோக்கி, உங்களுக்கு என்ன பிரச்சனை, எதற்காக இப்படி விசில் அடித்துக் கொண்டே இருக்கிறீர்கள்? என மேடையிலேயே மிகவும் கோவமாகப் பேசினார். பார்த்திபனின் இந்த திடீர் கோப அரங்கில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X